Breaking News

உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்த உக்ரைன் முனைப்பு

உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்காக உக்ரைன் முனைப்பு காட்டி வருகிறது.

உக்ரைனில் தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், போரின் பயங்கரத்தை முறியடிக்கவும், அதன் தாக்கத்தில் இருந்து மீண்டுள்ள மக்களின் கனவை நிறைவேற்றும் வகையிலும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கு உக்ரைன் அரசு ஆயத்தமாகி வருகிறது. 2030இல் நடைபெற உள்ள உலகக் கோப்பை போட்டியை ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளுடன் இணைந்து நடத்துவதற்கான கூட்டு முயற்சியை உக்ரைன் தொடங்கி உள்ளது. இது விளையாட்டு உலகிற்கு அப்பால் மக்களை இணைக்கும் என்று மூன்று நாடுகளின் கால்பந்து கூட்டமைப்பு தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உலகக்கோப்பை போட்டியை நடத்தும் திட்டத்திற்கு அதிபர் செலன்ஸ்கி ஆதரவு தெரிவித்திருப்பதாக உக்ரைன் கால்பந்து கூட்டமைப்பு தலைவர் ஆண்ட்ரி பாவெல்கோ கூறினார்.

இதையும் படிக்க: '2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர்தான் எனது இலக்கு' - ஷிகர் தவான் பளீச்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/KG6Bjci
via

No comments