Breaking News

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா புறப்பட்டது இந்திய அணி -கோப்பையுடன் தாயகம் திரும்புவார்களா?

டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று அதிகாலை ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றது.
 
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் நவம்பர் 13ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று அதிகாலை ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றது. மும்பை விமான நிலையத்தில் இருந்து இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றனர். புறப்படுவதற்கு முன் வீரர்கள் அனைவரும் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர்.

image

காயம் காரணமாக டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறி உள்ள பும்ராவுக்கு பதிலாக மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படததால் 14 வீரர்கள் மட்டுமே தற்போது ஆஸ்திரேலியாவுக்குச் செல்கிறார்கள். பும்ராவுக்கு பதிலாக முகமது ஷமி மாற்று வீரராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிப்பால் முகமது ஷமி  தென்னாப்பிரிக்கா தொடரில் பங்கேற்கவில்லை. தற்போது அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி செய்து வருகிறார். அவரது உடற்தகுதி குறித்த ரிப்போர்ட் கிடைத்தவுடன் பும்ராவுக்கு பதில் முகமது ஷமி அணியில் சேர்க்கப்படுவாரா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் ஸ்டாண்ட் பை  இடம்பெற்றுள்ள ஸ்ரேயஸ் ஐயர், தீபக் சாஹர், ரவி பிஷ்னோய் ஆகியோர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட உள்ளனர். இந்த தொடர் நிறைவடைந்ததும் இவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு செல்லவுள்ளனர்.

image

டி20 அணியில் உள்ள பல வீரர்களுக்கு ஆஸ்திரேலிய மைதானங்களில் விளையாடிய போதிய அனுபவம் இல்லை என்பதால், முன்கூட்டியே ஆஸ்திரேலியா சென்று பயிற்சிகளை மேற்கொள்ளவிருக்கிறது. அங்கு பெர்த் மைதானத்தில் 13ம் தேதி வரை இந்திய வீரர்களுக்கு பயிற்சி முகாம் நடக்கிறது. உலகக் கோப்பை லீக் ஆட்டங்களுக்கு முன்னதாக இந்திய அணி இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ளது.

டி20 உலகக் கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இந்தியா தனது முதல் போட்டியில் வரும் அக்டோபர் 23ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது.

இதையும் படிக்க: '2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர்தான் எனது இலக்கு' - ஷிகர் தவான் பளீச்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/ORl3b7V
via

No comments