'2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர்தான் எனது இலக்கு' - ஷிகர் தவான் பளீச்
'டி20 உலகக் கோப்பையின் ஸ்டாண்ட் பை வீரர்களுக்கு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் ஒரு நல்ல வாய்ப்பு' என்று கூறியுள்ளார் ஷிகர் தவான்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் நடந்து முடிந்த 3 போட்டிகள் டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து ஒருநாள் போட்டிகள் இன்று தொடங்குகிறது. இந்தியாவின் முன்னனி வீரர்கள் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்கு செல்ல உள்ளதால் ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியில் இளம் அறிமுக வீரர்களான முகேஷ் குமார், ரஜத் பட்டிதார் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் ஸ்டாண்ட் பை அதாவது காத்திருப்பு வீரர்களாக இடம்பெற்றுள்ள ஸ்ரேயஸ் ஐயர், தீபக் சாஹர், ரவி பிஷ்னோய் உள்ளிட்டோரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாட உள்ளனர். இதில் ஸ்ரேயஸ் ஐயர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி இன்று லக்னோவில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, '"நிச்சயமாக இந்த தொடர் மிகவும் முக்கியமானது, ஏனென்றால் டி20 உலகக் கோப்பை தொடரில் இடம்பெற்றுள்ள ஸ்டாண்ட் பை வீரர்கள் இந்த தொடரில் அதிக போட்டிகளில் விளையாடப் போகிறார்கள். அவர்கள் தற்போது சிறந்த மனநிலையில் இருப்பார்கள். இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால் அவர்களின் கரியருக்கு உதவும். அவர்கள் யார் என்பது உலகுக்குத் தெரியும்? அதனால் அவர்கள் இந்தத் தொடரை டி20 உலகக் கோப்பைக்காக நன்கு பயன்படுத்திக்கொள்ள முயல்வார்கள். அவர்கள் எவ்வளவு அதிகமாக விளையாடுகிறார்களோ, அந்தளவுக்கு அதிக அனுபவத்தைப் பெறுவார்கள்; அவர்களின் நம்பிக்கை அளவு அதிகரிக்கும்; அவர்கள் தவறுகளில் இருந்து கற்றுக் கொள்வார்கள். எனக்கும் கூட.
தற்போது அடுத்த ஆண்டு (2023) நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடர்தான் எனது இலக்காகும். அந்த போட்டிக்கு நல்ல உடல் தகுதியுடனும், நல்ல மனநிலையுடனும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இது ஒரு மிகவும் அருமையான அணி. இந்த அணியுடன் நாங்கள் மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஜிம்பாப்வேயில் விளையாடியிருக்கிறோம்'' என்று தவான் முதல் ஒருநாள் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இதையும் படிக்க: ”அந்த பையனுக்கு என்ன ரோல்.? ஏன் அவரை குழப்புகிறீர்கள்”- ரிஷப் பண்ட் குறித்து அஜய் ஜடேஜா
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/h8KLoEn
via
Post Comment
No comments