நீண்ட காத்திருப்பில் சஞ்சு சாம்சன்.. 3வது டி20 போட்டியிலாவது வாய்ப்பு கிட்டுமா?
நியூசிலாந்தில் இந்திய அணி
நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டி20 போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்துச் செய்யப்பட்டது. 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
3வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. தொடரை இழக்காமல் இருக்க நியூசிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டியது கட்டாயம் ஆகும். இந்நிலையில், மூன்றாவது போட்டியில் இந்திய அணியில் யார் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பது குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் அதிகமாக அடிபடுவது சஞ்சு சாம்சன் பெயர்தான்.
சஞ்சு சாம்சனுக்காக பொங்கும் ரசிகர்கள்!
சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணி தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இந்திய அணியில் ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்பட்டு வருவதாகவும், சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுவதாகவும் அவர்கள் பதிவிட்டு வருகிறார்கள். இரண்டுப் போட்டிகளில் வாய்ப்பு கொடுத்து விட்டு 10-15 போட்டிகளில் பெஞ்சில் உட்கார வைக்கப்படுவதாக ஆதங்கப்படுகிறார்கள்.
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">That's how things work for Sanju Samson since 2014, the most unfairly treated player ever in Indian cricket history<a href="https://twitter.com/hashtag/SanjuSamson?src=hash&ref_src=twsrc%5Etfw">#SanjuSamson</a> <a href="https://t.co/SRCTR3PBsR">pic.twitter.com/SRCTR3PBsR</a></p>— Sanju Samson Fans Page (@SanjuSamsonFP) <a href="https://twitter.com/SanjuSamsonFP/status/1594211434782945280?ref_src=twsrc%5Etfw">November 20, 2022</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
இந்திய அணிக்காக சஞ்சு சாம்சன் இதுவரை!
2015 ஆம் ஆண்டில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் அறிமுகமாகி இருந்த போதும், அதிகப் போட்டியில் அவர் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 294 ரன்கள் எடுத்துள்ளார். 16 டி20 போட்டிகளில் விளையாடி 296 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை வாய்ப்பு வழங்கப்படவில்லை. மொத்தமே இந்திய அணிக்காக 26 போட்டிகளில்தான் விளையாடியுள்ளார்.
சஞ்சு சாம்சன் குறித்து ரவிசாஸ்திரி சொன்னது!
ஒருமுறை சஞ்சு சாம்சன் குறித்து ரவிசாஸ்திரி கூறுகையில், “சீனியர் வீரர்கள் அனைவரையும் பெஞ்சில் அமர வைத்துவிட்டு, சஞ்சு சாம்சனுக்கு குறைந்தபட்சம் 10 போட்டிகளில் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுங்கள். ஒவ்வொரு முறையும் வாய்ப்பு கொடுத்த இரண்டு போட்டிகளுக்குப் பின் அவரை நீக்காதீர்கள். 10 போட்டிகளுக்குப் பின்னர் அந்த முடிவை எடுங்கள். அத்துடன், பேட்டிங்கில் முறையான வாய்ப்பினையும் கொடுங்கள்” என்று கூறியிருந்தார்.
3வது டி20 குறித்து ஹர்திக் பாண்டியா சொன்னது!
முன்னதாக இரண்டாவது டி20 போட்டியில் வெற்றிபெற்ற பின்னர் பேசிய ஹர்திக் பாண்டியாவிடம், மூன்றாவது டி20 போட்டியில் அணியில் மாற்றம் இருக்குமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது ஹர்திக், “அடுத்தப் போட்டியில் எவ்வித மாற்றம் இருக்கும் என்பதை இப்போது கூற முடியாது. எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும்; ஓய்வு தேவைப்படுகிறதா என சிலரிடம் கேட்க வேண்டும்” என்றார்.
சஞ்சு சாம்சன் கிரிக்கெட் கேரியர்!
கேரள மாநிலத்தை சேர்ந்தவரான சஞ்சு சாம்சன் தொடக்கத்தில் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். தன்னுடைய 17வது வயதில் விதர்பா அணிக்கு எதிராக முதல் தரப் போட்டியில் அறிமுகம் ஆனார். இரண்டாவது சீசனிலேயே 5 போட்டிகளில் விளையாடி இரண்டு சதம், ஒரு அரைசதம் அடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். பின்னர், 2012 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக ஒப்பந்தமானார். ஆனால், ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சென்றார்.
இதனிடையே, ஐக்கிய அமீரகத்திற்கு சென்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பைக்கான இந்திய ஜூனியர் அணியில் இடம்பிடித்திருந்தார். அந்த தொடரில் மூன்று அரைசதங்களுடன் டாப் ரன் குவித்து அசத்தினார். இருப்பினும் அந்தப் போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு போகவில்லை.
7வது ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆலோசகராக ராகுல் டிராவிட் இருந்தபோது சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் பெரிய எதிர்காலம் இருக்கிறது என புகழ்ந்து பேசியிருந்தார். பின்னர் 2015 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சன் தன்னுடைய முதல் சர்வதேச போட்டியில் விளையாடினார். அந்த டி20 போட்டியில் 19 ரன்கள் மட்டுமே எடுத்தார். பின்னர், டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக டிராவிட் இருந்தபோது 2016ம் ஆண்டில் சஞ்சு சாம்சனை ஏலத்தில் எடுத்தார். இந்திய கிரிக்கெட் அணியில் தோனிக்கு பிறகு விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. 2018 முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/8XYTySC
via
No comments