Breaking News

மதுரை | பிரதமர் நிகழ்ச்சிக்கு சென்று  திரும்பியபோது, கார் விபத்தில் சிக்கிய பாஜக நிர்வாகி உயிரிழப்பு

மதுரை: மதுரை திருநகர் ஸ்ரீனிவாசா நகர், 6-வது தெருவைச் சேர்ந்தவர் ஹரிராம் (49). பாஜகவில் நெசவாளர் பிரிவு மாவட்டத் தலைவராக இருந்தார். நவ., 11ம் தேதி பிரதமர் மோடி திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றபோது, ஹரிராம் பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு இரவு காரில் வீடு திரும்பினார்.

அப்போது, திண்டுக்கல் - திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் எல்என்டி கம்பெனி அருகே வந்தபோது, அவரது கார் விபத்தில் சிக்கியது. தலையில் பலத்த காயமடைந்த அவர், மதுரை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக நாகமலை புதுக்கோட்டை போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MbxyuKS
via

No comments