தொழிலாளர் நலத்துறை சார்பில் ரூ.18.80 கோடியில் ஐடிஐ, விடுதிக் கட்டிடங்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார்
சென்னை: தொழிலாளர் நலத் துறை சார்பில் ரூ.18.80 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு ஐடிஐ கட்டிடங்கள், விடுதிகள், மண்டல இணை இயக்குநர் அலுவலகம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாணவர்கள் தொழிற்பயிற்சி பெறுவதன் மூலம், வேலைக்கேற்ற திறனைப் பெற்று தகுதியான வேலைவாய்ப்பை பெறவும், தங்களது சமூக பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ளவும் இயலும் என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையால், நடத்தப்பட்டு வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GR509yW
via
No comments