46-வது புத்தக காட்சி ஜன. 6-ல் தொடக்கம்: பபாசி அறிவிப்பு
சென்னை: சென்னையில் 46-வது புத்தகக் காட்சி, ஜன.6-ம் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க (பபாசி) செயலாளர் எஸ்.கே.முருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 46-வது புத்தகக் காட்சியை ஜன.6 முதல் 22-ம் தேதி வரைநந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடத்துவது என்று செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தேதி உறுதியானதும், திறப்பு விழா தேதி அதற்கேற்ப மாற்றி அமைக்கப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Xbsvn0j
via
No comments