படப்பிடிப்பின் இடைவெளியில் மேக்கப் ரூமில் தற்கொலை செய்துகொண்ட டிவி நடிகை! - மும்பை போலீஸார் விசாரணை
பாலிவுட் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பவர் துனிஷா சர்மா(20). அதிகமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடத்திருக்கிறார். தற்போது அதிகமான டிவி நிகழ்ச்சிகளில் நடித்து வந்தார். நேற்று மும்பை அருகில் உள்ள வசாய் நைகாவ் ராம்தேவ் ஸ்டூடியோவில் டிவி நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்பில் துனிஷா சர்மா கலந்துகொண்டார். படப்பிடிப்பின்போது மதிய உணவுக்கு இடைவெளி விடப்பட்டது. அந்த நேரத்தில் துனிஷா, அவருடன் நடித்த சகீன் மொகமத் கானின் மேக்அப் அறைக்குச் சென்றார்.
மொகமத் கான் தனது பகுதியின் படப்பிடிப்பு முடிந்து வந்தபோது மேக்அப் அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் கதவை உடைத்து பார்த்த போது உள்ளே அவர் வாஷ் ரூமில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். உடனே அவரை படப்பிடிப்பில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நடிகையின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் சக நடிகர் சீசன் மொகமத் கான் என்பவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், ``படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களிடம் அனைத்து கோணத்திலும் விசாரித்து வருகிறோம்" என்று தெரிவித்தனர். சோசியல் மீடியாவில் சர்மா மிகவும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் ஆவார். சர்மாவின் மரணம் டிவி நடிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து சர்மாவுடன் நடித்தவர்கள் கூறுகையில், ``கடந்த சில நாள்களாக சர்மா மிகவும் மனஅழுத்தத்தில் காணப்பட்டார். ஆனால் இந்த அளவுக்கு விபரீத முடிவு எடுப்பார் என்று நாங்கள் நினைத்துப் பார்க்கவில்லை" என்று தெரிவித்தனர்.
தற்போது சர்மா, அலிபாபா தஸ்தான்-இ-காபூல் என்ற டிவி தொடரில் நடித்து வந்தார். சகீன் மொகமத் கான் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி சந்திரகாந்த் ஜாதவ் தெரிவித்துள்ளார். தற்கொலைக்கு முன்பு சர்மா எந்த விதமான கடிதமும் எழுதி வைத்திருக்கவில்லை. துனிஷா சர்மா சகீன் மொகமத் கானை காதலித்து வந்ததாகவும், அவரால்தான் தற்கொலை செய்துகொண்டதாகவும் துனிஷாவின் தாயார் குற்றம்சாட்டியிருக்கிறார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/okFKiZH
No comments