Breaking News

'சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை' – நடிகர் விஷால்

சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை என திருப்பதியில் நடிகர் விஷால் பேசினார்.

திருப்பதியில் உள்ள மூன்று தனியார் பொறியியல் கல்லூரிகளில் லத்தி  திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் விஷால் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

image

அப்போது, லத்தி  திரைப்பட டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தில், டிக்கெட் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் விவசாயிகளின் நலனுக்காக செலவு செய்ய முடிவு செய்திருக்கிறேன். சந்திரபாபு நாயுடுவின் குப்பம் தொகுதி மக்கள் மீது இருக்கும் அன்பு காரணமாக அந்த தொகுதியில் ஒருசில வளர்ச்சி பணிகளை மேற்கொண்டேன்.

image

ஜெகன்மோகன் ரெட்டியை எனக்கு நிரம்ப பிடிக்கும். ஆனால், சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து குப்பம் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை. நடிகர் சங்க கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடையும். அதன் பின் நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது பற்றிய ஆலோசனை நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/Fe809G6

No comments