இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா?
2023 கிரிக்கெட் உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது. அதற்குள் ஒரு நிலையான 12-14 வீரர்களை தயார் படுத்தும் முயற்சியில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளது. இதனொரு பகுதியாக இந்திய அணியின் ஒயிட் பால் கேப்டனாக எதிர்காலத்தில் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) சமீப காலமாக இந்த யோசனை பரிசீலித்து வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த யோசனையை பிசிசிஐ அதிகாரிகள் ஹர்திக் பாண்டியாவிடம் தெரிவித்துள்ளதாகவும், ஆனால் ஹர்திக் முடிவெடுக்க சிலநாட்கள் அவகாசம் கேட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6L3h2r5
No comments