Breaking News

குழாய் இணைப்புப் பணி; திருவிக நகர் மண்டலத்தில் நாளை குடிநீர் வராது: குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னை: கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய குழாய் இணைப்புப் பணி நடைபெற இருப்பதால், திரு.வி.க.நகர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (டிச.21) குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் பிரதான உந்து குழாயில் நாளை காலை 8 முதல் இரவு 8 மணி வரை இணைப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக திரு.வி.க.நகர் மண்டலத்துக்கு உட்பட்ட திரு.வி.க.நகர், அயனாவரம், ஏகாங்கிபுரம், பெரம்பூர், செம்பியம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குழாயின் மூலமாக வழங்கும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Gm3rCvB
via

No comments