Breaking News

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு இதுவரை செலவிடப்பட்ட தொகை எவ்வளவு? - மா.சுப்பிரமணியன் விளக்கம் 

சென்னை: "2021-22 மற்றும் 2022-23 ஆம் நிதியாண்டுகளில் தமிழ்நாடு அரசால் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் தொற்றா நோய்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு தவிர, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சிறப்பு நிதி ஒதுக்கீடாக ரூ.681.64 கோடி வழங்கப்பட்டு, இதுவரை ரூ.407.06 கோடி செலவிடப்பட்டுள்ளது" என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்களைத் தேடி மருத்துவம்" (MTM) திட்டத்தை பற்றி சமீபத்தில் நாளிதழ்களில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட அறிக்கை தொடர்பாக நான் நேற்றே விரிவாக ஊடகங்கள் வாயிலாக விபரம் தெரிவித்தேன்.மக்களைத் தேடி மருத்துவம் திட்டமானது மாநிலத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார மையங்கள், கூடுதல் ஆரம்ப சுகாதார மையங்கள், மேம்படுத்தப்பட்ட (ஊரக மற்றும் நகர்ப்புற) ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய அளவில் ஒன்றிய அரசு மற்றும் அனைத்து மாநிலங்களின் கவனத்தை கவரும் வகையில் பாராட்டுதல்களையும் சிறந்த வரவேற்பினையும் பெற்றுள்ள ஒரு முன்னோடித் திட்டமாகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Act1vi4
via

No comments