Breaking News

ரவீந்திர ஜடேஜா, அஸ்வினின் சுழலில் 177 ர ன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா - 450 விக்கெட் வீழ்த்தி அஸ்வின் சாதனை

நாக்பூர்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வினின் சுழற்பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தொடர்ந்து பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 77 ரன் எடுத்தது.

நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் சுழற்பந்து வீச்சாளர் டாட் மர்பி அறிமுக வீரராக களமிறங்கினார். இந்திய அணியில் விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம் பெற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6TqfZ2V

No comments