மகளிர் டி20 உலகக் கோப்பை இன்று தொடக்கம்
கேப் டவுன்: மகளிருக்கான டி 20 கிரிக்கெட்உலகக் கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் இன்று தொடங்குகிறது. வரும் 26-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம்வென்றுள்ள ஆஸ்திரேலியா,தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து,மே.இ.தீவுகள், இந்தியா, நியூஸிலாந்து, இலங்கை, வங்கதேசம்,பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய10 அணிகள் பங்கேற்கின்றன.
குரூப் 2-ல் இடம் பிடித்துள்ள ஹர்மான் பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் 12-ம் தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iCxFKAH
No comments