Breaking News

கால்பந்து அரங்கில் புதிய சாதனை படைத்த ரொனால்டோ!

பிரபல கால்பந்தாட்ட வீரரான போர்ச்சுகலை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, சர்வதேச அளவில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற தனித்துவ சாதனையைப் படைத்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள யூரோ கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டியில், போர்ச்சுகல் அணிக்காக ரொனால்டோ களமிறங்கினார். அதில், அவர் அடித்த 2 கோல்களின் உதவியுடன் 4-0 என்ற கணக்கில் லிச்சென்ஸ்டைன் அணியை போர்ச்சுகல் அணி வீழ்த்தியது.

image

இந்த போட்டியில் களமிறங்கியதன் மூலம், சர்வதேச ஆடவர் கால்பந்தாட்ட போட்டிகளில் ரொனல்டோ புதிய சாதனை படைத்துள்ளார். மொத்தம் 197 சர்வதேச போட்டிகளில் அவர் இதுவரை விளையாடி உள்ளார். இந்த சாதனையை உலகக்கோப்பை தொடரிலேயே அவர் எட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காலிறுதிப் போட்டியில் போர்ச்சுகல் பெற்ற தோல்வியால் அந்த வாய்ப்பை இழந்தார். இதன்மூலம் குவைத் வீரர் அல்-முதாவாவின் சாதனையை அவர் தகர்த்துள்ளார். மேலும், அவர் விரைவில் சர்வதேச ஆடவர் கால்பந்தாட்டத்தில் 200 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைக்க இருக்கிறார்.

கடந்த 2003ம் ஆண்டு முதல் போர்ச்சுகல் அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி வரும் ரொனால்டோ, இதுவரை 120 கோல்களை அடித்துள்ளார். இதன்மூலம் சர்வதேச போட்டிகளில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையையும் தன்னகத்தே கொண்டுள்ளார். முன்னதாக கடந்தாண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரில் போர்ச்சுகல் அணியின் தொடக்க லீக் ஆட்டத்தில் கோல் அடித்ததன் மூலம், 5 உலகக்கோப்பை தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/gOdIBof
via

No comments