Breaking News

சொந்த காரணங்களுக்காக வாய்ப்பை வீணடிக்கக் கூடாது: மருத்துவ மாணவர்களுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவுரை

சென்னை: முதுகலை மருத்துவ மேற்படிப்புக்கான சேர்க்கையை சொந்த காரணங்களுக்காக வீணடிக்கக் கூடாது என மருத்துவ மாணவர்களுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த 2019-ம் ஆண்டுக்கான முதுகலை மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வில் அகில இந்திய ஒதுக்கீட்டில் மருத்துவரான ஆஷ்ரிதாவுக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. அதன்படி மருத்துவக் கல்லூரியில் உரிய கட்டணங்களையும், அசல் சான்றிதழ்களையும் ஒப்படைத்து கடந்த 2019 மே 1-ம் தேதி சேர்ந்த மருத்துவர் ஆஷ்ரிதா, இரண்டே நாட்களில் மே 3-ம் தேதி தனது திருமணத்தைக் காரணம் காட்டி அந்த மருத்துவ மேற்படிப்பைத் தொடர விருப்பம் இல்லை எனக்கூறி அசல் சான்றிதழ்களை கோரியுள்ளார். ஆனால் படிப்பை பாதியில் நிறுத்தினால் ரூ. 15 லட்சத்தை செலுத்தி அசல் சான்றிதழ்களை பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/O9iK863
via

No comments