Breaking News

Wrestlers’ protest: ``போக்சோ தவறாகப் பயன்படுத்தப்படுகிறது..!" - பிரிஜ் பூஷன் சரண் சிங்

இந்திய மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் குற்றச்சாட்டின்பேரில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்மீது டெல்லி போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த வழக்கில் பிரிஜ் பூஷன் சரண் சிங்மீது சிறுமி ஒருவரும் பாலியல் புகார் அளித்திருப்பதால், அவர்மீது போக்சோ உட்பட இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

பிரிஜ் பூஷண் சரண் சிங் - மல்யுத்த வீரர்கள்

இதற்கிடையில், பிரிஜ் பூஷன் சரண் சிங்கை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தவேண்டும் என மல்யுத்த வீராங்கனைகள் கூறிவந்தனர். அதன் பிறகு பிரிஜ் பூஷன் சரண் சிங், `வினேஷ் போகட்டும், பஜ்ரங் புனியாவும் இந்தச் சோதனைக்குத் தயாரென்றால் நானும் இதற்குத் தயார்' எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், போக்சோ சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக பிரிஜ் பூஷன் சரண் சிங் கூறியிருக்கிறார். இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பிரிஜ் பூஷன் சரண் சிங், ``போக்சோ சட்டம் பெரிய அளவில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகள், முதியவர்கள், சீர்களுக்கு (seers) எதிராகத் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.

பிரிஜ் பூஷன் சரண் சிங்

அதிகாரிகள்கூட இதைத் தவறாகப் பயன்படுத்துவதிலிருந்து விடுபடவில்லை. இந்தச் சட்டத்தின் பல்வேறு அம்சங்களை ஆராயாமலேயே காங்கிரஸ் அரசு கொண்டுவந்திருக்கிறது. எனவே சீர்களின் தலைமையின்கீழ், (போக்சோ) சட்டத்தை மாற்ற அரசாங்கத்தை வலியுறுத்துவோம்" என்று கூறினார்.



from India News https://ift.tt/d2w9EtL

No comments