மேக்கேதாட்டூ அணை... கர்நாடகாவுக்கும் ஆபத்து!
அனைவருக்கும் பசுமை வணக்கம்!
கர்நாடகாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காவிரி நீரை வைத்து அரசியல் செய்வது வாடிக்கைதான். அதிலும் ‘மேக்கேதாட்டூ’ அணை என்றால் சொல்லவே வேண்டாம். இப்போது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் அரசின் துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரும், “மேக்கேதாட்டூ அணையைக் கட்டியே தீருவோம்” என்று அதே பழைய பல்லவியைப் பாடியுள்ளார்.
‘‘புதிய அணை கட்டப்பட்டால் இதுவரையில் அதிக கவனம் பெறாத மற்றொரு பிரச்னையும் உருவாகும் வாய்ப்புள்ளது. ‘மேக்கேதாட்டூ’ என்றழைக்கப்படும் பகுதி, பழுதடைந்த ஒரு பூமிப் பரப்பாகும். புவியியல் ரீதியாக இப்பகுதி நிலையற்றது. பூமியின் அடித்தட்டுப் பலவீனமாக உள்ள பூமித்தளத்தில் ஓர் அணையைக் கட்டுவது பொறுத்தமானதாக இருக்காது’’ என்று கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுநர்களான ஜி.வி.ஹெக்டே மற்றும் கே.சி.சுபாஷ்சந்திரா எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
இந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு மட்டுமல்ல பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகப் பகுதிகளும் புவியியல் சார்ந்த பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என விரிவான ஆய்வுக் கட்டுரையையும் எழுதியுள்ளார்கள். அந்த மாநிலத்தைச் சேர்ந்த வல்லுநர்களே, அணை கட்டுவதை எதிர்க்கும்போது, புதிய துணை முதல்வர் அணை கட்ட துடிப்பதை என்னவென்று சொல்வது?
மேலும், மேக்கேதாட்டூ அணை கட்ட 5,252.40 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. அணைக்காக இவ்வளவு பரப்பளவைக் கொண்ட நிலப்பகுதி கையகப்படுத்தப்பட்டால், காவிரி வனவிலங்குச் சரணாலயத்தின் 3,182.90 ஹெக்டேர் நிலமும், முக்கியமான வனவிலங்குப் பாதையாக (குறிப்பாக யானைகளுக்கு) அமைந்துள்ள காப்பு வனத்தின் (Reserved Forest) 1,869.5 ஹெக்டேர் பகுதியும் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.
இப்படி இயற்கையைச் சிதைத்து, புதிய பிரச்னைகளை உருவாக்குவது, கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதற்குச் சமம். இனியாவது, கர்நாடக அரசு அறிவியல் பார்வையில் சிந்திக்க வேண்டும்; அதுதான் இரண்டு மாநிலங்களுக்கும் இனியது.
- ஆசிரியர்செய்தி: ‘‘மேக்கேதாட்டில் அணைகட்டத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு!அப்ப நாங்க கிளம்பறோம். இத்தனை வருஷமா நாங்க எப்படி கூவுனோமோ... அதேபோல அடுத்த 5 வருஷத்துக்குக் கூவிக்கிட்டே இருக்கணும்.கவலையேபடாதீங்க... அப்படியே அசத்திப்புடுவோம். கட்சி கலர் மட்டும்தான் வேற. மத்தபடி நாம எப்பவுமே ஒண்ணுக்குள்ள ஒண்ணுதானே!
from India News https://ift.tt/lV9YWoj
No comments