Breaking News

`விதிகளை மீறி பணிசெய்ய நிர்பந்திப்பதால்கூட ரயில் விபத்து நடந்திருக்கலாம்!' - கார்த்தி சிதம்பரம்

"ஒடிசா ரயில் விபத்து குறித்து விசாரணை மேற்கொள்பவர்கள் மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்களாக இருக்க வேண்டும்" என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.

ஒடிசா ரயில் விபத்து

காரைக்குடியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், "ரயில்வே பணியாளர்களை 12 மணி நேரத்துக்கும் மேலாக விதிகளை மீறி பணி செய்ய நிர்பந்தப்படுத்துவதால்கூட இந்த ரயில் விபத்து நடந்திருக்கலாம்.

நவீன கட்டுமானப் பணிகளில் கவனம் செலுத்தாமல், அதிவேக ரயிலைக் கொண்டு வருவதால் இதுபோன்ற விபத்து நடக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

ஒடிசா ரயில் விபத்து

ஒடிசா ரயில் விபத்து குறித்து விசாரணை மேற்கொள்பவர்கள் மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்களாக இருக்க வேண்டும்.

நாடாளுமன்றத் திறப்பு விழாவில் பழைய மரபுகளை மறந்து புதிய மரபுகளைத் திணிக்க பா.ஜ.க முயன்றிருக்கிறது.

கார்த்தி சிதம்பரம்

நாடாளுமன்ற புதியக் கட்டடத்தை ஜனாதிபதிக்கு மதிப்பளிக்காமல் பிரதமர் மரபை மீறியதால், அந்த நிகழ்ச்சியை நாங்கள் புறக்கணித்தோம்.

ஜனநாயக ரீதியில் அடுத்த ஆண்டு வரும் தேர்தலில் மக்கள் பா.ஜ.க-வுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள்" என்றார்.



from India News https://ift.tt/WPSoGBi

No comments