Breaking News

Tamil News Today Live: வமரசனஙகள கரததல எதரகளளத தறனறற தமக - எஸ.ஜ.சரய வவகரததல அணணமல

எஸ்.ஜி.சூர்யா விவகார்த்தில் அண்ணாமலை

தமிழ்நாடு பாஜகவின் மாநிலச் செயலாளராக இருப்பவர் எஸ்.ஜி சூர்யா. ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் தீவிரமாக செயல்படும் எஸ்.ஜி சூர்யா தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறித்து ட்விட்டரில் எஸ்.ஜி.சூர்யா பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், ‘கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மை பணியாளரின் உயிர் பறிபோனது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார்’ என பதிவிட்டிருந்தார். இது தொடர்பான புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்ணாமலை

இந்நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ``தமிழக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, நேற்று இரவோடு இரவாக கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கதக்கது. சமூகப் பிரச்னைகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் இரட்டை வேட நிலைப்பாட்டினை விமர்சித்ததற்காகக் கைது செய்திருக்கிறார்கள். விமர்சனங்களை கருத்தால் எதிர்கொள்ளத் திறனற்ற திமுக, எதிர்க்கருத்துக்கள் கூறுபவர்களைக் கைது செய்து, அவர்கள் குரலை முடக்கப் பார்க்கிறது. அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்களை எல்லாம் கைது செய்யும் ஜனநாயக விரோதப் போக்கு தமிழகத்தில் நிலவுகிறது.

கருத்துச் சுதந்திரத்தின் காவலர்கள் போல் தங்களைக் காட்டிக் கொண்டு, எதிர்க் குரல்களை எல்லாம் நசுக்க நினைக்கும் முயற்சி நீண்ட நாளைக்குச் செல்லாது என்பதை திமுக அரசு நினைவில் கொள்ள வேண்டும். விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் இது போல தொடர்ந்து பாஜக தொண்டர்களைக் கைது செய்வது எதேச்சதிகாரப் போக்கு. பாஜக தொண்டர்களை, இது போன்ற அடக்குமுறைகளால் முடக்கி விட முடியாது. எங்கள் குரல், மக்களுக்காக எப்போதும் துணிச்சலாக ஒலித்துக்கொண்டிருக்கும்.” என்றார்.

பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது!

தமிழ்நாடு பாஜகவின் மாநிலச் செயலாளராக இருப்பவர் எஸ்.ஜி சூர்யா. ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் தீவிரமாக செயல்படும் எஸ்.ஜி சூர்யா தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். சமூகவலைதளத்தில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குறித்து தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பதிவு செய்துவருபவர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறித்து ட்விட்டரில் எஸ்.ஜி.சூர்யா பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், ‘கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மை பணியாளரின் உயிர் பறிபோனது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார்’ என பதிவிட்டிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சரியாக 11.15 மணிக்கு சென்னை தி.நகர் இல்லத்தில் இருந்த அவரை மதுரை போலீஸார் கைது செய்து மதுரைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.



from India News https://ift.tt/Jxn9w85

No comments