ராஜபாளையம்: கவுன்சிலர்களை ஒருமையில் பேசிய ஆணையாளர்? - பாதியில் நிறைவடைந்த நகராட்சி கூட்டம்!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி கூட்டம், நகர்மன்றத் தலைவர் பவித்ரா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சரிவர பணியாற்றுவதில்லை, நகராட்சி கூட்டம் குறித்து அழைப்பு முறையாக யாருக்கும் கொடுப்பதில்லை என்பன உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை கவுன்சிலர்கள் முன்வைத்து பேசினர்.
அப்போது, 'முறையாக வரி கட்டும் தெருக்களில் போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை' என 9-ம் வார்டு கவுன்சிலர் முகம்மது ரபீக் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, 'வரி கட்டுவது மட்டுமே, உரிமையை கேட்பதற்கு தகுதி ஆகாது' என கூறினார்.
தொடர்ந்து 12-வது வார்டு கவுன்சிலர் திருமலைக்குமார் பேசுகையில், நகராட்சித் தலைவர் முடிவு செய்த தீர்மானங்களை, ஆணையர் தன்னிச்சையாக திருத்தம் செய்வதாக குற்றம் சாட்டினார். இதற்கு ஆணையர் பதிலளித்து பேசியபோது, 'சட்டப்படி தலைவருக்கு தகவல் தெரிவித்த பின்னர் தீர்மானத்தை திருத்த அதிகாரம் உண்டு' என கூறினார். இதனால், நகராட்சி ஆணையாளர் மற்றும் கவுன்சிலர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, ஆணையர் பார்த்தசாரதி கவுன்சிலர்களை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து ஆணையாளரை கண்டித்து நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் கோபமடைந்த ஆணையாளர் பார்த்தசாரதி, கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நகராட்சி கூட்டத்தை பாதியிலேயே புறக்கணித்து சென்ற ஆணையாளருக்கு, கவுன்சிலர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த பரபரப்பு சம்பவத்தை தொடர்ந்து நகராட்சி கூட்டம் பாதியிலேயே அறிவிப்பு இன்றி நிறைவடைந்தது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/OmyKobc
No comments