Breaking News

``மோடி ஆட்சியில் இருக்கும்வரை பட்டாசுத் தொழிலுக்கு தொல்லை தொடரும்" - சொல்கிறார் மாணிக்கம் தாக்கூர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வந்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "பெண்கள் இடஒதுக்கீடு விவகாரத்தில் அரை மனதோடு மத்திய அரசு மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இதை அமல்படுத்த 5 வருடம் ஆகலாம் அல்லது 10 வருடம் கூட ஆகலாம். ஆகவே இடஒதுக்கீடு மசோதா குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெளிவுப்படுத்த வேண்டும்.

தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும், சரவெடி தயாரிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது. மத்திய அரசு சிவகாசிக்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என்பது இந்த தீர்ப்பின் மூலம் தெரிகிறது. பிரதமர் மோடி ஆட்சியில் இருக்கும் வரை பட்டாசு தொழிலுக்கான தொல்லைகள் தொடரும்.

இந்த தீர்ப்பினால் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் கூறும் உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்த வேண்டும். தமிழகத்தையும் கர்நாடகாவையும் பிரிக்கும் விதத்தில் பா.ஜ.க. செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. காவிரி விவகாரத்தில் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் வேலையை பா.ஜ.க. செய்துவருகிறது.

அ.தி.மு.க - பா.ஜ.க. கூட்டணி முறிவு குறித்து அவர்களே இன்னும் தெளிவில்லாமல், குழப்பத்தில் இருக்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரை இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. தமிழகத்தில் 40 க்கு 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம். பா.ஜ.க தலைமையில் தமிழகத்தில் 3-வது அணி அமைத்தால் அது நோட்டாவுக்குத்தான் சாதகமாக இருக்கும். அண்ணாமலைக்கு திராணி இருந்தால் அவர் விருதுநகர் தொகுதியில் நிற்க தயாரா என்பதை சவாலாக விடுக்கிறேன்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/OdcYomv

No comments