Breaking News

10 மடஙக உயரநதத மததரததள கடடணம... ர.20 மததரததள இன ர.200'

2001-ம் ஆண்டில் இருந்தே தமிழகத்தில் முத்திரைத்தாள் கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்ததையொட்டி தற்போது இந்த சட்ட முன்வரைவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், நீதித்துறை அல்லாத முத்திரைத்தாள் அச்சிடுவதற்கான செலவுகள் பல மடங்கு அதிகரித்துள்ளது.

வீடு, நிலம் வாங்கும் போது, வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகை பத்திரம், கிரையம், தானம் மற்றும் செட்டில்மெண்ட் போன்றவற்றை பத்திரங்களில் பதிவு செய்ய மக்கள் பணம் கட்டி முத்திரைத்தாள் வாங்குவார்கள். முத்திரைத்தாள் கட்டணம் மூலமாக அரசாங்கம் கருவூலத்திற்கு தேவையான வரியை பெறுகிறது.

இந்த சட்டத்திருத்தத்தின்படி, முத்திரைத்தாள் கட்டணம் 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதன் படி செட்டில்மெண்ட் பத்திரங்களுக்கான பதிவுக் கட்டணம் ரூ.10,000 ஆகவும் முத்திரைத் தீர்வை கட்டணம் ரூ.40,000 ஆகவும் பொது அதிகார ஆவணங்களுக்கான கட்டணம் ரூ.10,000 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பதிவுத்துறை அலுவலகம்

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ``பதிவுத்துறையில்‌ அளிக்கப்படும்‌ சேவைகளுக்கான கட்டணங்கள்‌ கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மாற்றம்‌ செய்யப்படவில்லை.  எனவே, பதிவுத்துறையால்‌ வழங்கப்பட்டு வருகின்ற ஆவண பதிவு, பதிவு செய்யப்படும்‌ ஆவணத்தினை பாதுகாத்தல்‌, மின்னணு சாதனத்திலிருந்து ஆவண நகல்கள்‌ வழங்குதல்‌ போன்ற சேவைகளைப்‌ பொருத்து கட்டண விதங்களை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில்‌ பதிவுச்சட்டம்‌, 1908 பிரிவு 78-இல்‌ கட்டண விவர அட்டவணையிலுள்ள 20 பிரிவுகளுக்கான கட்டண விகிதங்களும்‌ சில ஆவணப்‌ பதிவுகளுக்கான பதிவு மற்றும்‌ முத்திரை கட்டண விதங்களும்‌ திருத்தியமைக்கப்பட்டுள்ளன. 

முத்திரைத்தாள்

அதன் படி ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம்‌ ரூ.20 -லிருந்து ரூ.200,- எனவும்‌, குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மெண்ட்‌ பாகம்‌ மற்றும்‌ விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவு கட்டணம்‌ ரூ.4,000-லிருந்து ரூ.10,000 எனவும்‌, அதிகபட்ச முத்திரை தீர்வை ரூ.25000-லிருந்து ரூ.40,000 எனவும்‌, தனி மனை பதிவிற்கான கட்டணம்‌ ரூ.200லிருந்து ரூ.1000 எனவும்‌, குடும்ப உறுப்பினர்கள்‌ அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு பதிவுக்‌ கட்டணம்‌ ரூ.10,000 என்று உள்ளதை சொத்தின்‌ சந்தை மதிப்பிற்கு ஒரு சதவீதம்‌ எனவும்‌ மாற்றியமைக்கப்படுகிறது." என்று அறிவித்துள்ளது.

ஏற்கனவே நிலத்தின் வழிகாட்டி மதிப்பை தமிழக அரசு மாற்றியமைத்த நிலையில், தற்போது முத்திரைத்தாள் கட்டணத்தையும் பத்து மடங்கு உயர்த்தியுள்ளது. இதனால் வீடு, நிலம் வாங்குவோர்களுக்கு சுமை அதிகமாகியுள்ளது.



from India News https://ift.tt/PZmR50L

No comments