Breaking News

பத சவல சடடம: ஜல 14-ககள பதமககள கரதத தரவபபத எபபட?!

பொது சிவில் சட்டம் தொடர்பாக பா.ஜ.க-வுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடுமையான கருத்து யுத்தம் கனன்றுகொண்டிருக்கின்றன. எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் விதமாக பிரதமர் மோடி தொடங்கி பா.ஜ.க முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக விவாதித்துக்கொண்டிருக்க, அதற்கான பதிலடிகளையும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சிகளும் தெரிவித்துவருகின்றன. இந்த நிலையில், பொது சிவில் சட்டம் குறித்து தங்களின் கருத்துக்களை மத்திய அரசிடம் தெரிவிக்கக்கூடிய கால அவகாசம் வரும் ஜூலை 14-ம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது.

பா.ஜ.க திட்டம்?

பொதுசிவில் சட்டம் கருத்துக்கேட்பு அறிவிப்பு:

கடந்த ஜூன் 14-ம் தேதி 22வது சட்ட ஆணையம் இந்தியா முழுவதுக்கும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவது பற்றி பொதுமக்கள், மத அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் தங்கள் கருத்துகளை பதிவுசெய்யும் வகையில், ஒரு மாதம் கால வரையரையுடன் ஜூலை 14-ம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என அறிவித்தது. அதைத்தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் பொது சிவில் சட்டத்து ஆதரவாகவும் எதிராகம் தங்கள் கருத்துகளை சட்ட ஆணையத்திடம் தெரிவித்து வருகின்றனர். இதுவரையில் 9 லட்சம் கருத்துக்கள் பெறப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

கருத்து தெரிவிப்பது எப்படி?

கருத்து தெரிவிப்பது தொடர்பாக இந்தியாவின் 22வது சட்ட ஆணையம், சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், ``பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மத அமைப்புகளிடம் கருத்துகளையும் யோசனைகளையும் பெற மீண்டும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. விருப்பமும் ஆர்வமும் இருப்பவர்கள், அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 30 நாள்களுக்குள் Membersecretary-lci@gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக இந்திய சட்ட ஆணையத்திற்கு தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்!" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது அறிவிப்பு வெளியான ஜூன் 14-ம் தேதியிலிருந்து ஜூலை 14-ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

சட்டம்

மின்னஞ்சல் தவிர தபால் மூலமாகவும் கீழ்கண்ட முகவரிக்கு பொது சிவில் சட்டம் தொடர்பாக கருத்துக்களை எழுதி அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தபால் அனுப்பவேண்டிய முகவரி:

'உறுப்பினர் செயலர்,

இந்திய சட்ட ஆணையம்,

4-வது தளம், லோக் நாயக் பவன்,

கான் மார்க்கெட், புதுடெல்லி-110 003.'

எதிர்ப்பும் ஆதரவும்:

பொது சிவில் சட்டத்திற்கு ஏற்கெனவே காங்கிரஸ், தி.மு.க, ஐக்கிய ஜனதா தளம், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி எனப் பல்வேறு எதிர்கட்சிகளின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். , `பொது சிவில் சட்டம் என்ற பெயரில் நாட்டின் பன்முகத் தன்மையைப் பறிக்க பா.ஜ.க அரசு திட்டமிடுகிறது. இந்தச் சட்டத்தால் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள்! 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்து வேண்டுமென்றே இந்த சட்டத்தை கொண்டுவர பா.ஜ.க முயற்சிக்கிறது' என குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

பொது சிவில் சட்டம் - மோடி, கெஜ்ரிவால்

அதேபோல சமீபத்தில் டெல்லியில் நடந்த சட்டம் மற்றும் நீதித் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்திலும் எதிர்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றன. அதேசமயம், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்திருக்கின்றன. விதிவிலக்காக ஆம் ஆத்மி கட்சி மட்டும் பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவு அளித்திருக்கிறது.



from India News https://ift.tt/0MurQIh

No comments