இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் சுமார் 200 மீட்டர் கடல் நீர் உள் வாங்கியது.! கோவை வால்பாறைக்கு செல்லும் வழியில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்த தமிழக அமைச்சர் முத்துசாமி. கோவை வால்பாறையில் முகாமிட்டுள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினரை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார். அமைச்சர் பொன்முடி நில அபகரிப்பு வழக்கிற்காக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி பின்னர் விடுதலை ஆனார். இடம் :சென்னை கலெக்டர் அலுவலகம். நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பலத்த காற்று வீசுவதால் பூண்டு பயிர் சாய்ந்து சேதமடைந்துள்ளது. சேலத்தில் ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் தனியார் கடை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வருகை புரிந்தார், சேலம் அம்மாபேட்டையில் குடியிருப்பு பகுதியில் புகுந்த ஆந்தையை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டனர். விழுப்புரம் அருகே பூவரசன்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சின்னக்காமன்பட்டியில் ஆதிதிராவிடர் நலத்துறை அரசு மாணவர் விடுதியினை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விருதுநகர் பி.எஸ்.என்.எல். ஓய்வூதிய சங்கங்கள் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். பாவேந்தர் பாரதிதாசனின் மகன் கவிஞர் மன்னர் மன்னனின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பாரதிதாசன் நினைவு இல்லத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட மேட்டுப்பாளையம் அரசு தொடக்க பள்ளி கட்டடத்தை முதல்வர் ரங்கசாமி மற்றும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தனர். கனமழை காரணமாக புதுச்சேரி மாஹே பிராந்தியத்தில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. முன்னாள் இந்திய துணை பிரதமர் பாபு ஜெகஜீவன்ராம் நினைவு நாளையொட்டி புதுச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு சபாநாயகர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். புதுச்சேரி சுகாதார துறை மற்றும் அப்பல்லோ மருத்துவமனையும் இணைந்து மருத்துவ ஒப்பந்தம் முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் கையெழுத்தானது. புதுச்சேரி சுல்தான்பேட்டை பகுதியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் திடக்கழிவு சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஈரோடு ஈஞ்சம்பள்ளி பகுதியில் அமைந்துள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஆய்வு மேற்கொண்ட சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழும் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ் மஸ்தான முகாமில் உள்ள மக்களுக்கு வேட்டி சேலையை வழங்கினார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள பண்ணாரி மாரியம்மன் கோயிலில் அமைச்சர் எல்.முருகன் தரிசனம் செய்துவிட்டு வளாகம், பக்தர்கள் குண்டம் இறங்கும் பகுதிகளை பார்வையிட்டார். ஈரோடு மாட்டு சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் அதிகளவில் வந்துள்ளதால் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஈரோட்டில் ஊரக வளர்ச்சி துறைக்கு வழங்கப்பட்ட வாகனங்களில் ஐிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஈரோடு சுந்தராம்பிகை சமேத சோழீஸ்வரர் கோயில் கும்பாபிேஷகத்தன்று கோபுரகலசத்திற்காக காவிரி கரையில் பதினோறு கும்பத்திற்கு பூஜை செய்யப்பட்டு கலசத்தில் நீர் நிரப்பப்பட்டுள்ளது. திருநெல்வேலி: போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்க்காக நெல்லை சந்திப்பில் ரவுண்டானா அமைப்பதற்க்காக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தென்காசி: பழைய குற்றால அருவியில் கொட்டும் தண்ணீரில் ஆனந்த குளியலில் சுற்றுலா பயணிகள். கடலூர், அமைச்சர் பொன்முடியின் கார் மோதிய விபத்தில் காயமடைந்த ஜோதி என்பவர் தனக்கு உரிய இழப்பீடு எதுவும் வழங்கவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. தமிழக முதல்வர் ஆணைப்படி நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தி்ல் மேயர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது நாகர்கோவில் நாகராஜா கோயிலில் தீயணைப்பத்துறை சார்பில் கோயில் பணியாளர்களுக்கு தீத்தடுப்பு மற்றும் செயல்முறை விளக்கம் பயிற்சி அளிக்கப்பட்டது. from India News https://ift.tt/HjYroic
No comments