ஒன ப ட: பத சவல சடடம கறதத தமழச சநதரரஜனன கரதத சரய?
ஏ.பி.முருகானந்தம், மாநில பொதுச் செயலாளர், பா.ஜ.க
``உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார். அரசு எந்தத் திட்டம் கொண்டுவந்தாலும் அதை எதிர்ப்பதை மட்டுமே எதிர்க்கட்சிகள் வேலையாக வைத்திருக்கின்றன. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இங்கு அனைத்துச் சமுதாய மக்களும் ஒன்றாக, ஒற்றுமையாக வாழ்கிறார்கள். எனவே, சாதி, மத, இன, பாலினப் பாகுபாடு இல்லாமல் அனைத்துச் சமூக மக்களுக்குமான ஒரு பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டியது அவசியம். அரசியலமைப்புச் சட்டத்திலேயே பிரிவு 44-ல், `பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்று பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தச் சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது என்று பொய்யான பரப்புரை செய்வது கண்டிக்கத்தக்க செயல். கடும் எதிர்ப்புகளை மீறி முத்தலாக் முறை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அதை இஸ்லாமியச் சகோதரிகள் முழு மனதோடு வரவேற்றனர். அதேபோல இந்தச் சட்டமும் நடைமுறைக்கு வந்தால் யாருக்கும், எந்த பாதிப்பும் இருக்காது. மாறாக, இந்தச் சமூகத்தில் நிலவும் பாகுபாடுகள் களையப்பட்டு அனைவருக்கும் சமமான பலன்கள் கிடைக்கும். சிறுபான்மையினருக்குக் கடுகளவுகூட தீங்கு நேராது.’’
கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சி.பி.எம்
`` `பொது சிவில் சட்டம் சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது’ என்ற தமிழிசையின் கருத்து அபத்தமான பொய். சிறுபான்மை மக்களுக்கு மட்டுமன்றி, இந்து மதத்தில் இருக்கும் பல்வேறு பிரிவினரின் நலனுக்கும் இந்தச் சட்டம் எதிரானது. வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியினர் தொடங்கி, பலரும் இந்தச் சட்டத்துக்கு எதிராகக் குரலெழுப்பிவருகிறார்கள். இந்திய சட்ட ஆணையம், `பொது சிவில் சட்டத்தை இப்போது கொண்டுவரத் தேவையோ, அவசியமோ இல்லை’ எனத் தெளிவாகச் சொல்லியிருக்கிறது. அதையும் தாண்டி இந்தச் சட்டத்தைக் கொண்டுவரத் துடிப்பதற்கு பா.ஜ.க-வின் அரசியல் ஆதாயம் மட்டுமே காரணம். இதன் மூலம், சிறுபான்மை மக்களை ஒடுக்கி, அப்பாவி பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெற வேண்டும். மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்த வேண்டும் என்பதே இவர்களின் ஒற்றை நோக்கம். அதற்காக என்ன பொய் வேண்டுமென்றாலும் சொல்லத் தயங்க மாட்டார்கள். தேர்தல் வெற்றிக்காக இவர்கள் கொடுத்த வாக்குறுதியால்தான் இன்று மணிப்பூர் பற்றி எரிகிறது. அதேபோல, பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவந்து, மொத்த இந்தியாவையும் தீக்கிரையாக்கி, அரசியல் ஆதாயம் பெற நினைக்கிறார்கள்.’’
from India News https://ift.tt/qazxEpv
No comments