எதரககடசகள கடடண: ப.ஆர.எஸ வநதல கஙகரஸ சரத'' - க.ச.ஆர-ஐ வளசய ரகல!
2024-ல் நடைபெறும் லோக் சபா தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்துவதற்கு வியூகம் அமைக்கும் விதமாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உட்பட 16 எதிர்க்கட்சிகள் பாட்னாவில் கடந்த ஜூன் 23-ல் ஒன்றாக சங்கமித்தன. இதில் ஆம் ஆத்மி காங்கிரஸுக்கு கண்டிஷன் போட்டுவிட்டு தான் கூட்டத்தில் பங்கேற்றது. இதனால் 2024-ல் காங்கிரஸும் ஆம் ஆத்மியும் ஒரே கூட்டணியில் இருக்குமா என்று கேள்வியெழுந்தது. அதேபோல், இந்த கூட்டத்தில் தெலங்கானா முதல்வர் கே.சி.ஆர், மாயாவதி ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.
எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் ஜூலை 13, 14 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாட்னா எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கே.சி.ஆரின் பி.ஆர்.எஸ் (பாரத ராஷ்டிர சமிதி) கட்சி கலந்துகொண்டால் காங்கிரஸ் கலந்துகொள்ளாது என்று எதிர்க்கட்சித் தலைவர்களிடம் முன்னதாகவே தெரிவித்து விட்டதாகக் கூறியிருக்கிறார்.
தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய ராகுல் காந்தி, ``பி.ஆர்.எஸ் கட்சியானது பா.ஜ.க ரிஷ்தேதார் சமிதி போன்றது. தெலங்கானா மாநிலம் தன்னுடைய ராஜ்ஜியம் என்றும், அதற்கு தான் தான் ராஜா என்றும் கே.சி.ஆர் நினைத்துக் கொண்டிருக்கிறார். உண்மையில் பி.ஆர்.எஸ் பா.ஜ.க-வின் பி டீம். கே.சி.ஆரின் ரிமோட் கண்ட்ரோல் பிரதமர் மோடியிடம் இருக்கிறது.
சமீபத்தில் கர்நாடகாவில் ஏழைகளுக்கு எதிரான அரசாங்கத்துக்கு எதிராகப் போராடிய காங்கிரஸ், ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டோர்களின் ஆதரவுடன் அவர்களைத் தோற்கடித்தது. அடுத்து தெலங்கானாவிலும் அதேபோன்று நடக்கப்போகிறது. கர்நாடகாவில் என்ன நடந்ததோ அது தெலங்கானாவிலும் தொடரும். முன்பு தெலங்கானாவில், பி.ஆர்.எஸ், பா.ஜ.க, காங்கிரஸ் என மும்முனை போட்டி என்று கூறப்பட்டது, ஆனால் தற்போது பி.ஆர்.எஸ், காங்கிரஸ் மட்டும் தான். பா.ஜ.க பஞ்சராகிவிட்டது" என்றார்.
தொடர்ந்து பாட்னா எதிர்க்கட்சிகள் கூட்டம் பற்றி பேசிய ராகுல் காந்தி, ``கூட்டத்தில் பி.ஆர்.எஸ் கலந்துகொண்டால், நாங்கள் கலந்துகொள்ள மாட்டோம் என்று எதிர்க்கட்சித் தலைவர்களிடம் முன்பே கூறிவிட்டோம். பி.ஆர்.எஸ்ஸுடன் மேடையைப் பகிர்ந்துகொள்ள மாட்டோம்" என்று கூறினார்.
from India News https://ift.tt/rdzoaL4
No comments