Breaking News

``தக்காளி விலையேற்றத்தை ஒன்றிய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது!" - அமைச்சர் பெரியகருப்பன்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழராங்கியத்தில் ரூ.33 லட்சம் செலவில் அமைக்கப்பட்டிருக்கும் பால் குளிரூட்டும் நிலையத்தை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் ஆகியோர் திறந்துவைத்தனர்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், "ஆண்டுதோறும் சில பருவ காலங்களில் விளைச்சல் குறைந்து விலை ஏற்றம் காணும். அந்த சீசன் தற்போது வந்திருக்கிறது. இந்தியா முழுவதும் காய்கறிகள் தட்டுப்பாடும், விலையேற்றமும் கண்டிருக்கிறது.

தக்காளி

வேறு எந்த மாநிலத்திலும் இதைக் கண்டுகொள்ளாதபோதும், விலையேற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக முதல்வர் நேரடியாக நடவடிக்கை மேற்கொண்டும், ஆலோசனைகளையும் வழங்கிவருகிறார்.

அதற்கேற்ப படிப்படியாக தமிழகத்தில் மூன்று தினங்களாக 300 கடைகளில் தக்காளி ரூ.60-க்கு விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. தக்காளி தட்டுப்பாடு இன்னும் 10 தினங்கள் நீடிக்கலாம். பிறகு விலை சீராகிவிடும்.

தக்காளி விலை ஏற்றத்தைத் தடுக்க ஒன்றிய அரசும் கவனம் செலுத்த வேண்டும். மாநில அரசுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

தக்காளி இறக்குமதி செய்வது ஒன்றிய அரசின் கொள்கை முடிவு. தக்காளி விலை ஏற்றத்தை ஒன்றிய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது, கண்டனத்துக்குரியது.

அமைச்சர் பெரியகருப்பன்

தொடர்ந்து, தக்காளி விலை ஏற்றத்தால் விவசாயிகளின் நிலை உயர்ந்திருப்பதைப் பாராட்ட வேண்டியதுதான்

வேளாண்துறை மூலமாக, எந்தெந்த காலகட்டங்களில், எந்தெந்த பயிர்களை, விளைவிக்க வேண்டும் என விவசாய்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" என்றவரிடம் மதுரையில் திறக்கப்பட்டிருக்கும் கலைஞர் நூலகத்துக்கு திருவள்ளுவர் பெயர் வைத்திருக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, "அவர்கள் ஆட்சியில் எதற்காவது வள்ளுவர் பெயர் வைத்தார்களா என்பதை ஜெயக்குமார் சொல்லட்டும்" என்றார்.



from India News https://ift.tt/ATISPow

No comments