Breaking News

``தமிழ், இந்திய மொழி என்பதைவிட வேறென்ன பெரிய பெருமை வேண்டும்?" - பிரான்ஸில் பெருமிதமடைந்த மோடி

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள்கள் அரசுமுறை பயணமாக பிரான்ஸுக்குச் சென்றிருக்கிறார். இன்று பிரான்ஸின் தேசிய தின விழாவில் அவர் பங்கேற்கவிருக்கிறார். நேற்றைய தினம் அந்த நாட்டின் தலைநகர் பாரீஸில் புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, ``இந்திய மொழிகள் பன்முகத்தன்மைக் கொண்டவை. இந்தப் பன்முகத்தன்மையை இந்தியர்கள் மட்டுமல்ல, உலகமும் இப்போது அனுபவித்து வருகிறது. இந்தப் பன்முகத்தன்மைதான் நமது ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலம்.

மோடி - இம்மானுவேல்

இந்த வலிமையின் மூலம் மட்டுமே, இந்தியர்கள் தங்கள் கனவுகளை அடைகிறார்கள். அவர்களின் ஆசைகளை நிறைவேற்றுகிறார்கள். அதன்மூலம் இன்று தேசத்தையும் உலகையும் முன்னோக்கிக் கொண்டு செல்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் 10-வது இடத்திலிருந்த இந்தியா, இன்று உலகின் 5-வது பெரிய பொருளாதாரமிக்க நாடாக முன்னேறியிருப்பது, நம்மை பெருமிதத்தில் ஆழ்த்துகிறது. இந்தச் சாதனை இந்தியர்களுக்குப் பெருமைக்குரிய விஷயம்.

இந்தியா 5 டிரில்லியன் பொருளாதாரமாக மாற இன்னும் அதிக காலம் எடுக்காது என, இன்று உலகமும் நம்பத் தொடங்கியிருக்கிறது. இந்தியா ஜனநாயகத்தின், நாகரிகத்தின் தாய். பன்முகத்தன்மையின் முன்மாதிரி. பன்முகத்தன்மை இந்திய நாட்டின் மாபெரும் சக்தி. 100-க்கும் மேற்பட்ட மொழிகளில் கல்வி கிடைக்கும் நாடு இந்தியா. உலகின் பழைமையான மொழியான தமிழ் மொழி, இந்தியாவில் பிறந்தது என்பதை பெருமைக்குரியதாகக் கருதுகிறேன். தமிழ், இந்திய மொழி என்பதைவிட வேறென்ன பெரிய பெருமை வேண்டும்?

பிரதமர் மோடி - பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்

இந்திய நிலம் ஒரு பெரும் மாற்றத்தைக் கண்டு வருகிறது. நான் பலமுறை பிரான்ஸுக்கு வந்திருக்கிறேன். இருப்பினும், பிரான்ஸில் தேசிய தினத்தையொட்டி வந்திருப்பது சிறப்பு சந்தர்ப்பமாக மகிழ்வளிக்கிறது. இந்த நாளில் பிரான்ஸ் மக்களுக்கு வாழ்த்துகள்" எனக் கூறினார்.



from India News https://ift.tt/D1U3nYj

No comments