Breaking News

"எததன ஆபரஷன சயதலம தணடனயலரநத தபப மடயத!" - சநதல பலஜய வமரசதத அணணமல

கரூர் திருவள்ளுவர் மைதானத்தில், கரூர் மாவட்ட பா.ஜ.க சார்பில், மத்திய பாஜக அரசின் ஒன்பதாண்டுக்கால ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டமும், `கரூர்-மாற்றத்திற்கான மாநாடு'ம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு, சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், ``கரூர் மாவட்ட மக்கள் இப்போது தீபாவளி பண்டிகை கொண்டாதுவதுபோல் குதூகலமாக இருக்கிறார்கள். தமிழக சரித்திரத்தைப் பார்க்கும்போது, கரூர் மண்ணுக்கு தனிச்சிறப்பு இருக்கிறது. இது, ஆன்மிகத்தில் அதிகம் செழிப்படைந்த மண். கரூவூரார் வாழ்ந்த மண், தான்தோன்றிமலை பெருமாள் என்று ஆன்மிகம் செழிக்கும் ஊர். மூவேந்தர்கள் காலத்தில் மன்னர்களுக்குள் பிரச்னை என்றால், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கரூருக்குத்தான் வர வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தில் அரசியல் புரையோடிபோனதற்குக் காரணமாகவும் கரூர் மையப்புள்ளியாக மாறிபோயிருக்கிறது. ஓட்டுக்குப் பணம் என்ற தவறான நிலைக்கும் கரூர் காரணமாகிவிட்டது. 2016-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பணபட்டுவாடா பிரச்னைக்காக தேர்தல் நிறுத்தப்பட்ட அவமானத்தைச் சந்தித்தது அரவக்குறிச்சி தொகுதி.

மாநாட்டில் பேசும் அண்ணாமலை

அதற்குக் காரணம், அரவக்குறிச்சி மாடல், கரூர் மாடல் என்று சொல்லப்பட்டு, சமீபத்தில் ஈரோட்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பட்டி மாடலாக மாறியிருக்கிறது. இந்த மண்ணுக்கு உரிய பெருமையை மையப்படுத்தி, நான் கரூர்காரன் என்று பெருமைபட்டாலும், இங்குள்ள அரசியல்வாதி கரூருக்கு அவமானத்தை தேடித்தந்துவிட்டார். இப்போது கரூர் மண் தலைகுனிவைச் சந்தித்ததற்குக் காரணமும், இங்குள்ள சில அரசியல்வாதிகள்தான். அதனால்தான், இழந்த மானத்தை மீட்டெடுக்க பா.ஜ.க சார்பில் நடத்தப்படும் இந்த மாநாட்டுக்கு, `கரூர்-மாற்றத்துக்கான மாநாடு' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால், இந்த மாநாட்டை இங்கு நடத்தக் கூடாது என்று ஏகப்பட்ட பிரச்னைகள் செய்தார்கள். ஒரு செந்தில் பாலாஜி உள்ளே சென்றிருந்தாலும்கூட, அவரின் கைத்தடிகளாக சில செந்தில் பாலாஜிகள் இன்னும் கரூர் மாநகரத்தில் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். தி.மு.க-வினர் போட்ட முட்டுக்கட்டைகளைத் தாண்டிதான், மதுரை ஹை கோர்ட்டுக்குப் போய் அனுமதி வாங்கி, இந்த மாநாட்டை நடத்துகிறோம். அப்படியும், 'நாங்க 30 நாள்கள் இங்கு நிகழ்ச்சி நடத்த அனுமதி வாங்கியிருக்கிறோம்' என்று தி.மு.க-வினர் பொய் ரசீதை தந்தார்கள். செந்தில் பாலாஜிக்குத்தான் பா.ஜ.க-வைக் கண்டு பயம். அவரின் அடிபொடிகளுக்கும் பா.ஜ.க-வைக் கண்டு எதற்கு பயம்? கரூர் மாவட்ட தி.மு.க மாவட்டச் செயலாளர் இல்லாத குறையை இங்குள்ள மாவட்ட ஆட்சியரும், எஸ்.பி-யும் போக்கும்விதமாகச் செயல்படுகிறார்கள். ஓர் அமைச்சர் பின்னாடி கூஜா தூக்கும் வேலையை இத்தோடு விட்டுவிடுங்கள்.

சுப்ரீம் கோர்ட் நடவடிக்கை எடுக்க இரண்டுமுறை வலியுறுத்தியும், அமைச்சர் செந்தில் பாலாஜியை இந்த அரசு ஏன் பாதுகாக்க துடிக்கிறது? ஆனால், சமூக வலைதளங்களில் பதிவுகள் போட்டதற்காக பா.ஜ.க தொண்டர்களை இரவு நேரங்களில் புகுந்து கைதுசெய்கிறீர்கள். கரூர் மாவட்டத்தில் தி.மு.க என்ற கட்சி முழுமையாக அழியும் சூழல் வந்துவிட்டது. பாரத பிரதமர் நரேந்திர மோடி, உலகத்தில் இருக்கிற பிரதமர்களில் `நம்பர் ஒன்' என்ற பெயரை உலக தலைவர்களால் பெற்றிருக்கிறார். பிரதமர் குறித்து எடுக்கப்பட்ட சர்வேயில், அவருடைய அப்ரூவல் ரேட்டிங் 78 சதவிகிதம். இங்கிலாந்து பிரதமரை, அந்த நாட்டு மக்களில் 19 சதவிகிதம் பேர் பிடிக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். அமெரிக்க தொழிலதிபர்கள், குறிப்பாக எலான் மஸ்க், 'நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்' என்று புகழ்ந்தார். தவிர, கூகுள் சுந்தர் பிச்சை, 'உலகத்திற்கே ஆன்லைன் பரிவர்த்தனையைக் கற்றுக்கொடுப்பவராக மோடி இருக்கிறார்' என்று புகழ்ந்தார். அதோடு, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் எகிப்து நாட்டின் உயர்ந்த விருது பெற்றது, ஆஸ்திரேலிய பிரதமர், 'மோடி இஸ் ஒன்லி தி பாஸ்' என்று சொன்னது என்று, மோடி பெற்ற பெருமைகள் ஏராளம். இப்படி, தன்னையும், நமது நாட்டையும் இந்திய பிரதமர் நம்பர் ஒன் இடத்தில் கொண்டு வந்து வைத்திருக்கிறார். ஆனால், தமிழ்நாட்டை ஆளும் முதல்வர், அவரும் நம்பர் ஒன் என்று சொல்லி வருகிறார். இது எப்படி இருக்கிறதென்றால், புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக்கொண்ட கதை மாதிரி இருக்கிறது. அமைச்சர் பதவியில் இருப்பதற்காக, தமிழக அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களும், 'நம்பர் ஒன் நம்பர் ஒன்' என்று கூவிக்கொண்டிருக்கிறார்கள்.

மாநாட்டுக்கு வந்தவர்கள்

ஆனால், முதலமைச்சர் எதில் நம்பர் ஒன்று தெரியுமா? மணல் கடத்துவதில், சாராய வியாபாரத்தில், 14 ஆண்டுகள் கள்ளச்சாராயம் மரணம் இல்லாத தமிழகத்தில் 32 பெண்களின் தாலியை அறுக்க வைத்ததில், பள்ளிமாணவர்களுக்கு அழுகிய முட்டைகள் வழங்கி ஊழல் செய்வதில், கஞ்சா விற்பனையில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமையை தேடித் தந்ததில், நாச்சியப்பன் கடையில் வாங்கிய கோப்பையைக் காட்டி உலகக் கோப்பை பெற்றதாகச் சொன்ன தம்பியை பக்கத்தில் வைத்து போட்டோ எடுத்து ஏமாந்ததில், `அமைச்சர்களால் எனக்கு தூக்கம் போனது' என்று இந்திய வரலாற்றில் எந்த மாநில முதல்வரும் சொல்லாததை ஓப்பனாகச் சொன்னதில், கொலை, கொள்ளை, கற்பழிப்பு அதிகம் நடக்கும் மாநிலமாக மாற்றியதில், ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் ரூ.30,000 கோடி ஊழல் செய்ததில், வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றியது என்பதில்தான் நம்பர் ஒன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மக்கள் சொல்லும்போது, 'பத்து ரூபா பாலாஜி' என்று சொன்னீர்கள். இன்னொரு தரப்பு, '11.05 பாலாஜி' என்று சொல்கிறார்கள். ஒரு ஆளுக்கு எத்தனை பெயர்கள்தான் வைப்பீர்கள். '11 மணிக்கு தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், 11:05-க்கு எல்லாம் மணல் கடத்தலை தொடங்கிவிடலாம். அதை தடுக்கும் அதிகாரிகள் இங்கே இருக்கமாட்டார்கள்' என்று பேசியவர்தான் செந்தில் பாலாஜி. அதை தெம்பாக எடுத்துக்கொண்ட தி.மு.க தொண்டர்கள் கடலூரில் மணல் கொள்ளையைத் தடுத்தவரை வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். அதேபோல், செஞ்சியில் ஏரியில் மணல் கொள்ளை நடப்பது பற்றி போஸ்டர் ஒட்டிய நபரை அடித்து உதைத்திருக்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பகுடியில் மணல் கொள்ளையைத் தடுத்த வி.ஏ.ஓ மீது தாக்குதல் நடத்தினர். தூத்துக்குடியில் மணல் கொள்ளையைத் தடுத்த வி.ஏ.ஓ-வை அவரது அலுவலகத்துக்குள் வைத்து வெட்டிக் கொன்றனர். அதேபோல், திருச்சியில் ஆர்.ஐ ஒருவர் தாக்கப்பட்டார். தஞ்சையில் போலீஸார் தாக்கப்படனர். இவைதான், இந்த ஆட்சியில் நடக்கும் மோசமான நிர்வாகத்தின் சாட்சி.

தமிழக அரசியலில் புரையோடி இருக்கக்கூடிய கறையான்களில் ஒரு கறையான் செந்தில் பாலாஜி. அவர் மட்டுமல்ல, அவர்போல் இந்த ஆட்சியில் பல பேர் இருக்கிறார்கள். இவர்களை சுத்தம் செய்யும் வரை தமிழகத்தின் அரசியல் சுத்தம் ஆகாது. ஊழல் புகார் இருக்கக்கூடிய ஒரு மந்திரி, சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு கிடைக்கப்பெற்ற ஒரு மந்திரி, இப்போதைய முதல்வர் எதிர்கட்சி தலைவராக இருந்தபோது, குளித்தலை மீட்டிங்கில் குற்றம்சாட்டி பேசிய மந்திரி, அப்படிப்பட்ட மந்திரியை மத்திய பாதுகாப்புத்துறை கைதுசெய்கிறது. ஆனால், அவர் கைதுசெய்த உடனேயே தனக்கு நெஞ்சு வலி என்கிறார். உடனே அரசு ஆஸ்பத்திரி மருத்துவர், அஞ்சு நிமிஷத்தில், அவருக்கு அஞ்சு இடங்களில் அடைப்பு வந்துவிட்டது என்று ரிப்போர்ட் தருகிறார். இவவ்ளவு வேகமாக நீங்க தமிழக மக்களுக்கு வைத்தியம் பார்த்திருந்தால், எத்தனை உயிர்கள் பிழைத்திருக்கும். அதிலேயே முதல்வர், 'எனக்கு தமிழ்நாட்டு மக்கள்மீது அக்கறை இல்லை. மாதாமாதம் பணம் கொடுக்கும் செந்தில் பாலாஜி நலனில்தான் அக்கறை' என்று சொல்லாமல் சொல்லிவிட்டார். செந்தில் பாலாஜியை பார்க்கிறதுக்கு இவர்கள் ஓடிய ஓட்டத்தைப் பார்க்க வேண்டுமே. நடக்கமுடியாது என்று நினைத்த துரைமுருகன் ஓடிப்போய் பார்த்தார். அஞ்சு ஜார்ஜ், பி.டி.உஷாவெல்லாம் அவரிடம் தோற்க வேண்டும். ஆனால், முல்லைப்பெரியாறு அணையில் யாரோ கதவை உடைத்த விவகாரத்தில், தண்ணீர் அதுபாட்டுக்கு உள்ளே வந்தது. ஆனால், அதை ஐந்து நாள்கள் கழித்துதான் ஆற அமர போய் பார்த்தார் துரைமுருகன். ஊழல் அமைச்சரைப் பார்க்க ஐந்தாவது நிமிடத்தில் போய் நிற்கிறார். இவ்வளவு பண்ணியும், அவருக்கு சங்கீதா இட்லிதான் வேண்டுமாம். ஜெயிலுக்குப் போனவர் களிதானே உண்ண வேண்டும்? எத்தனை ஆபரேஷன் பண்ணினாலும், ஒரு இதயம்தானே இருக்கிறது? இன்னும் எத்தனை ஆபரேஷன்கள் செய்தாலும், தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது.

மாநாட்டில் அண்ணாமலை

இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்தியாவிலேயே அதிகம் அறுவை சிகிச்சை செய்தவர் செந்தில் பாலாஜியாகத்தான் இருப்பார்போல. செந்தில் பாலாஜி தனக்கு ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு ஒரு கோடி ரூபாய் ஃபீஸ் கொடுத்தார். என்ன செய்தாலும், தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதுதான் நியதி. ஆனால், 2024-ல் மறுபடியும் மக்கள் தங்களுக்கு ஓட்டுப்போடுவார்கள் என்று ஸ்டாலின் நினைக்கிறார். இந்தியாவில் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். கமிஷன் இல்லாமல் நேர்மையாக ஆட்சி செய்யும் பிரதமருக்கு எதிராகக் கூடினார்கள். கூட்டம் முடிந்ததும், பிரஸைச் சந்திக்காமல் முதல்வர் ஓடிவந்துவிட்டார். கர்நாடகாவில் துணை முதல்வர், 'இந்த வருஷம் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் கிடையாது' என்று சொல்லியிருக்கிறார். பா.ஜ.க ஆட்சியில் இருந்தவரை ஒருசொட்டுகூட தண்ணீர் தமிழகத்துக்கு குறையவில்லை. மேக்கேத்தாட்டூவில் அணை கட்டப்படும் என்று பா.ஜ.க சொன்னபோது, தமிழகத்தில் நாங்கள் அதை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தோம். மத்திய அரசு அதை நிராகரித்தது. ஆனால், கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசு தண்ணீர் தரமாட்டோம், மேக்கேதாட்டுவில் அணை கட்டுவோம் என்று சொல்லிவருகிறது. இந்த சூழலில், வரும் ஜூலை 11-ம் தேதி நடக்கவிருக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தமிழக முதல்வர் எப்படி போகிறார் என்று பார்ப்போம்.

அப்படி போய்விட்டார் என்றால், தமிழ்நாட்டுக்குள் அவர் வரமாட்டார். அப்படி வர்றதுக்கு நாங்க விடப்போவதில்லை. ஏனென்றால், தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ் கூட்டுகிற கூட்டத்துக்கு, தமிழகத்தை அடமானம் வைத்துவிட்டு, அரசியல் லாபத்துக்காக நீங்கள் கர்நாடகத்துக்குப் போகும்போது, அதை பா.ஜ.க-காரங்க நாங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டோம். அதனால், அந்தக் கூட்டத்தை நீங்கள் புறக்கணிக்க வேண்டும்" என்றார்.



from India News https://ift.tt/SWiGY5p

No comments