நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தை 'குப்பையில்லா குமரி' என்னும் மக்கள் இயக்கமாக மாற்றும் நோக்கில், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் குலசேகரத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நடைப்பயணம். விக்கிரவண்டி டு தஞ்சாவூர் சாலையில், சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. இதனால் ஆங்காங்கே பல்லக்குழிகளால் விபத்து ஏற்பட்டு வருகிறது. உடனடியாக சரி செய்து தர வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை. நீலகிரி மாவட்டம், ஊட்டியை அடுத்த தொட்டபெட்டா அருகிலுள்ள தேயிலை பூங்காவில் பதியன் முறையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள 15 ஆயிரம் தேயிலை நாற்றுகள், நாற்று ஒன்று பயனாளர்களுக்கு நான்கு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தினந்தோறும் வீட்டில் இருக்கும் ஆடு, மாடுகளுக்காக புல்களை அறுத்து, தலையில் சுமந்து கொண்டு, நீண்ட தூரம் நடந்து சென்று அவற்றுக்குப் பசியாற்றும் பெண். மத்திய பாஜக அரசு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதவி பறிப்பு விவகாரத்தில் பழிவாங்கும் நோக்கை கண்டித்து ஈரோட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோட்டில் நடைபெற்ற தமிழ்நாடு நெடுஞ்சாலைத்தறை சாலை பணியாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் மாநிலத் தலைவர் சண்முகராசு பேசினார். ஈரோட்டில் நடைபெற்ற தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் முப்பெரும் விழாவில் மாநிலத் துணைத் தலைவர் ஆர்.ஆறுமுகம் பேசினார். ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான அனைத்து அலுவலர்களுக்கான உயர்மட்டக் குழு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் பேசினார், அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோசினி சந்திரா உட்பட பலர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகில் கூத்தப்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்காக தீர்த்த குடம் எடுத்து வந்த பக்தர்கள். சேலத்தில் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஏ.டி.ஜி.பி அருண் தலைமையில், காவலர்களுக்கு மன அழுத்தத்தை குறைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தர்மபுரியில், ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்ததை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம். தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் . பல்வேறு வங்கிகள் மூலம் நிதியுதவி வழங்கிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு ரூ.10 கோடிக்கான காசோலையை இயக்குநர் உதயசங்கரிடம் வழங்கினார். திருநெல்வேலி: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாறுவேட போட்டி நடத்தப்பட்டது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மேயர் மற்றும் மாவட்ட அளவில் உள்ள அனைத்து வர்த்தக நிர்வாகிகளுடன் `நமக்கு நாமே' திட்டம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. from India News https://ift.tt/7hA0wtW
No comments