Breaking News

பிபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து | அரை இறுதியில் நுழைந்தது ஆஸ்திரேலிய அணி - இங்கிலாந்து அணியும் முன்னேற்றம்

பிரிஸ்பன்: பிபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 7-6 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது. மகளிர் உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் ஆஸ்திரேலிய அணி அரை இறுதிக்கு தகுதி பெறுவது இதுவே முதன்முறையாகும்.

பிபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் நேற்று ஆஸ்திரேலியா - பிரான்ஸ் அணிகள் பிரிஸ்பன் மைதானத்தில் மோதின. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதன் 10-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WCJNT20

No comments