Tamil News Live Today சென்னை: ஊரப்பாக்கத்தில் ரெளடிகள் இருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!
சென்னை: ஊரப்பாக்கத்தில் ரெளடிகள் இருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!
தாம்பரம் மாநகர காவலின், கூடுவாஞ்சேரி காவல் எல்லைக்குட்பட்ட காரணை புதுச்சேரி செல்லும் பிரதான சாலையில் போலீஸாரை வெட்டி கொல்ல முயன்ற ரெளடிகள் இருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 3.30 மணி அளவில் போலீஸார் தணிக்கை பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வெளியான செய்தியில், போலீஸார் சோதனை பணியில் இருந்த நேரத்தில் வேகமாக கறுப்பு நிற கார் ஒன்று வந்துள்ளது. அந்த காரை போலீஸார் நிறுத்த முயன்ற போது நிற்காமல் சென்று காவல் உதவி ஆய்வாளரை இடிப்பது போல சென்றதுடன், அந்த கார், காவல் ரோந்து வாகனத்தில் மோதி நின்றுள்ளது.
மேலும் அதிலிருந்து ஆயுதங்களுடன் இறங்கிய நான்கு ரெளடிகள் போலீஸாரை தாக்கியுள்ளனர். இதில் உதவி ஆய்வாளர் காயமடைந்துள்ளார். இதனால் போலீஸார் தங்களை தற்காத்துக் கொள்ளும் விதமாக இருவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதன் காரணமாக இருவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். தொடர்ந்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட இருவரும் ஓட்டேரியை பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
from India News https://ift.tt/GMbzxt6
No comments