Breaking News

Tamil News Live Today : சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார் திரௌபதி முர்மு!

சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார் திரௌபதி முர்மு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நேற்றைய தினம் தமிழ்நாட்டின் முதுமலைக்கு வந்திருந்தார். பின்னர் அங்கிருந்து சென்னைக்குத் தனி விமானம் மூலம் நேற்று மாலை வந்தடைந்தார். இந்த நிலையில், இன்று காலை 9:30 மணியளவில், கிண்டி ஆளுநா் மாளிகை மைதானத்தில் குடியரசுத் தலைவருக்கு முப்படை தளபதிகள் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

அதைத் தொடர்ந்து, கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தின் விவேகானந்தா் அரங்கில் நடைபெறும் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசுகிறாா். இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ஆளுநா் மாளிகைக்குத் திரும்பும் திரெளபதி முா்மு, அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா். பின்னர் இன்றிரவு அங்கு ஓய்வு எடுக்கும் அவா், நாளை காலை 9:30 மணியளவில் காா் மூலம் சென்னை விமான நிலையத்துக்குச் சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் புதுச்சேரிக்குச் செல்கிறாா்.



from India News https://ift.tt/TLAb9fY

No comments