"பேச்சு சுதந்திரம்; மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை" - அமைச்சர் ஜெய்சங்கர்
கனடாவில் நிகழ்ந்த காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில், இந்திய அரசுக்குத் தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகள் கனடா இந்தியா இடையே பதற்றத்தை அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டனுக்கு 5 நாள் பயணமாகச் சென்றிருக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர் சந்திப்பில் இந்த விவகாரம் தொடர்பான கருத்துகளை தெரிவித்திருக்கிறார்.
அவர் செய்தியாளர் சந்திப்பில், "இந்தியா ஒரு ஜனநாயக நாடு. பேச்சு சுதந்திரம் என்றால் என்ன என்பதை நாங்கள் மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. பேச்சு சுதந்திரம் என்பது வன்முறையைத் தூண்டும் வரை நீட்டிக்கப்பட வேண்டிய அவசியமில்லை. அது சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பளிக்கிறது. அதற்குப் பெயர் சுதந்திரத்தைப் பாதுகாப்பதல்ல.
இந்தியத் தூதரகங்கள் தாக்கப்படுகின்றன. ஒருவேளை நீங்கள் எங்கள் நிலையிலிருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்... உங்கள் தூதரகங்கள்... உங்கள் அரசியல் பிரமுகர்கள்... உங்கள் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் உங்கள் எதிர்வினை என்னவாக இருக்கும்? அதுபோலத்தான் இந்தியாவும் செயல்படுகிறது. கனடா அவர்களின் குற்றச்சாட்டுகள் தொடர்பான தகவலைப் எங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருந்தால், நாங்கள் அதைப்பற்றிப் பேசத் தயாராக இருக்கிறோம்.
ஆனால், தூதரகத்தின் முன் புகைக் குண்டுகள், வன்முறை, இந்தியாவுக்கு எதிரான சுவரொட்டிகள் என நாங்கள் பார்க்க விரும்பாத சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்த்தப்படுகிறது. இதைச் சாதாரண விஷயமாகக் கருதுகிறீர்களா? வேறு எந்த நாட்டைச் சேர்ந்த தூதரகங்களாவது பாதிக்கப்பட்டிருந்தால், அந்த நாட்டு அரசின் நடவடிக்கை எப்படி இருந்திருக்கும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
எனவே, எதையும் சாதாரணமாக்க வேண்டாம். கனடாவில் என்ன நடக்கிறது என்பதை அந்த நாட்டு அரசு வெளியே கூறுவது முக்கியம். கனட அரசு பகிரங்கமாக மிரட்டப்படுகிறது. அதன் காரணமாகத்தான் கனடா விசா நடவடிக்கைகள் கூட தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மிக முக்கியமாக, கனடாவில் இந்தியத் தூதரகப் பணியாளர்களும் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர்.
இன்றளவும் அவர்கள் தங்கள் பணியைத் தொடர்வது பாதுகாப்பான சூழலில் இல்லை. கனடா அரசுடன் சில வருடங்களாகத் தொடர்ந்து பிரச்னை இருக்கிறது. பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் வன்முறைக்கு கனடா அனுமதி வழங்குவதைச் சுற்றியே தற்போதைய பிரச்னைகளும் சுழல்கிறது" என காட்டமாக குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/nIQMpbP
No comments