Breaking News

பருவமழை பாதுகாப்பு ஒத்திகை ; உணவு பாதுகாப்புதுறை ஆய்வு | - உதயநிதிக்கு செங்கோல் - News in Photos

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் பிரிவில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

எல்லா அத்தி பழங்களும் எனக்கு தான் என சுவைக்கும் அணில்! இடம்- சென்னை
மதுரை மேலூரில் திமுக கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு செங்கோல் வழங்கிய அமைச்சர் மூர்த்தி
கர்நாடகா அரசு தமிழகத்திற்கு காவிரி நீரை தர மறுப்பதை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடகா அணைகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வலியுறுத்தி காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன்பு தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோட்டில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மாவட்ட தொழில் மையம் சார்பாக மானியத்துடன் கூடிய கடன் உதவிகள் வழங்கும் விழாவினை அமைச்சர் சு. முத்துசாமி துவங்கி வைத்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை திருப்பதி பிரம்மோற்சவத்திற்கு செல்கிறது.
விருதுநகர் : கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30 சதவிகித சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன், துவக்கி வைத்து பார்வையிட்டார்.
புதுச்சேரி; மொரோக்கோவில் நடைபெற்ற நில நடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு சட்டப் பேரவையில் உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பருவமழை தொடங்க உள்ள நிலையில் டிராக்டர் மூலம் நிலத்தை பண்படுத்தி உழுது விதைக்கும் விவசாயி
திருநெல்வேலி: நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் வரும் 24-ம் தேதி முதல் இயக்கப்படுவது குறித்து ரயில்வே தென்மண்டல மேலாளர் ஆன்ந்து பத்திரிகையார்களுக்கு பேட்டியளித்தார்.
திருநெல்வேலி: தொடங்க இருக்கும் பருவமழைக்கான பாதுக்காப்பு தொடர்பான பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சியில் தீயணைப்பு கருவிகளை பார்வையிடும் கல்லூரி மாணவிகள்.
ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள பார்பிகிவில் என்ற உயர்தர அசைவ ஹோட்டலில் காலவதியான சிக்கன், மீன் போன்ற உணவுகளை உணவு பாதுகாப்பு துறை அதிாரிகள் ஆய்வு செய்தனர்.
நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி மாணவிகள் சுற்றுப்புற துாய்மையை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மஞ்சப்பை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் பெண்களுக்கு மஞ்சப்பைகள் வழங்கினார்.
நாகர்கோவில் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் பிரிவில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூரில் மழை நீர் வடிகால் கால்வாய்களில் மின் கம்பங்களை உள்ளே வைத்து கட்டப்படுவதாக பொதுமக்கள் புகார்: இடம்: நத்தவெளி ரோடு மற்றும் வண்டி பாளையம் இணைப்பு சாலை
வருமான வரித்துறை சோதனை நடைபெறும் சென்னை தேனாம்பேட்டை வெங்கட ரத்தினம் தெருவில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் காசியின் வீட்டை படத்தில் காணலாம்.


from India News https://ift.tt/KzXuZ6e

No comments