Breaking News

Tamil News Today Live: ``பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம்!” - முதல்வர் ஸ்டாலின்

``பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம்!” - ஸ்டாலின்

இமானுவேல் நினைவிடம்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ``பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில், இமானுவேல் சேகரனார் அவர்களின் சமூக பங்களிப்பினை போற்றும் வகையில் அவரின் பிறந்தநாள் நூற்றாண்டை ஒட்டி, அன்னார் நல்லடக்கம் செய்யப்பட்ட இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசு சார்பில் கட்டப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



from India News https://ift.tt/SCekGTV

No comments