Breaking News

மகளிர் இட ஒதுக்கீடு: `நடைமுறைக்கு வராமல் இருக்க 2 தடைகளை ஏற்படுத்தியிருக்கின்றனர்'- சிதம்பரம் தாக்கு

"நாடாளுமன்றத் தொகுதிகளை மறுவரையரை செய்யும்போது தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு இழப்பு ஏற்படும்" என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இட ஒதுக்கீடு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த ப.சிதம்பரம் பேசும்போது,

"மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சட்டமாகியுள்ளது. இந்த சட்டம் உடனே அமலுக்கு வராது. சும்மா வானவேடிக்கை காட்டுகிறார்கள். இந்த மசோதாவை தேவகவுடா பிரதமராக இருந்தபோது கொண்டு வந்தார். அதற்கு பிறகு வாஜ்பாய் இரண்டு முறை கொண்டு வந்தும் நிறைவேறவில்லை. 2010-ல் பிரதமர் மன்மோகன் சிங்  மாநிலங்களவையில் கொண்டு வந்தபோது நிறைவேறியது. அதே மசோதாவை அப்படியே நிறைவேற்றி இருந்தால் இந்த சட்டம் வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அமலுக்கு வந்திருக்கும். ஆனால், தேவையில்லாமல் விஷமத்தனமாக வேண்டுமென்றே இரண்டு தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். அது என்ன தடையென்றால், முதலில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும், இரண்டாவது தொகுதி மறுவரையறை செய்யவேண்டும். இவையிரண்டும் தடை கற்கள் மட்டுமல்ல, சுவரையே எழுப்பியுள்ளார்கள். இதை உடைத்துக்கொண்டு இந்த சட்டம் நடைமுறைக்கு வர நீண்டகாலம் ஆகும்.

ஏனென்றால் கடந்த முறை 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு இரண்டு ஆண்டுகள் நடந்தது. தொகுதி மறுவரையறை செய்யும் பணி ஆறு ஆண்டுகள் நடைபெற்றது. அதுபோல் இப்போதும் பணிகள் நடத்தும் வகையில், இரண்டு தடைகளை ஏற்படுத்தியுள்ளார்கள். அப்படி நடத்தினால் 2034-ம் ஆண்டு தேர்தலில்தான் இச்சட்டத்தை அமல்படுத்த வாய்ப்புள்ளது.

ப.சிதம்பரம்

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை பலருக்கு கிடைக்கவில்லை என்பது அரசின் கவனத்திற்கு சென்றுள்ள்து. அரசு பணிவுடன், கணிவுடன் பரிசீலனை செய்து, இன்னும் 20 லட்சம் பெண்களுக்கு தர வேண்டும்.

அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி பிளவால் ஒரு பக்கம் மகிழ்ச்சி, மறுபக்கம் வருத்தம் ஏற்பட்டுள்ளது. கூட்டணி இருந்தால்தான் எங்களுக்கு நல்லது. அந்த கூட்டணி அ.தி.மு.க ப்ளஸ் பா.ஜ.க அல்ல, அது அ.தி.மு.க மைனஸ் பா.ஜ.க.

இட ஒதுக்கீடு

காங்கிரஸ் அகில இந்திய கட்சி. காவேரி பிரச்னையில் தமிழக காங்கிரஸ் தமிழகத்தின் உரிமையை வலியுறுத்துகின்றனர். கர்நாடக காங்கிரஸ் கட்சியினர் கர்நாடகாவின் கோரிக்கையை வலியுறுத்துவார்கள் அதுதான் தர்மம்.
நாடாளுமன்றத் தொகுதிகளை மறுவரையரை செய்யும்போது தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு இழப்பு ஏற்படும்.

பல மாதங்கள் அச்சடித்த 2,000 ரூபாய் நோட்டுகளில் பாதி வங்கியிலேயே தங்கிவிட்டன. 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடித்தது தவறு, புழங்கத்தில் விட்டதும் தவறு, அதனை திரும்பப் பெற்றது அதைவிட தவறு. இது புத்திசாலி அரசு செய்யக்கூடிய காரியம் அல்ல.

இந்தியா கூட்டணியில் பிளவுகள் கிடையாது. நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டிருகிறது. மேலும் வலுவடையும்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/gJmaohN

No comments