``பிரபாகரன் உயிருடன் இருக்கிறார், அவரின் மகள் இன்று தோன்றுவார்!” - இயக்குநர் கெளதமன் சொல்வதென்ன?!
`பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், அவரின் மகள் நவம்பர் 27-ம் தேதி வெளியே வருவார்” எனப் பேசி புயலைக் கிளப்பியுள்ளார் இயக்குநர் கெளதமன்.
இறுதிகட்ட ஈழப்போரில், 2009 மே 17-ம் தேதி, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ``பிரபாகரன் உயிரோடு, நலமுடன் இருக்கிறார். இதை அவரின் குடும்பத்தினர் அனுமதியோடு தெரிவித்துக்கொள்கிறேன்” என 2023 பிப்ரவரி மாதமே பேசி சர்ச்சையைத் தொடங்கி வைத்தார் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன். அவர் பேசியதை எந்தவொரு அமைப்புமே ஏற்காத நிலையில் இப்போது இயக்குநர் கெளதமனும் ``பிரபாகரனும் அவரின் மனைவி மதிவதனியும்,மகள் துவாரகாவும் நலமுடன் இருக்கிறார்கள்” என அறிவித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளரும் இயக்குநருமான கெளதமன், ``பிரபாகரனின் மகள் துவாரகா பிரபாகரன் என்னிடம் அலைப்பேசியில் பேசினார், அப்போது, பிரபாகரன் குறித்தும் வினவினேன். அதற்கு அவர் ஒரு நொடி மௌனமாக இருந்துவிட்டு, அப்பாவும், அம்மாவும் நலமுடன் இருக்கிறார் எனச் சொன்னார்.
மேலும் மாவீரர் நாளான நவம்பர் 27-ம் தேதி, மாலை 5.30 மணிக்குமேல் துவாரகா பிரபாகரன் காணொலி வாயிலாகத் தோன்றி உலகத் தமிழரிடையே உரையாற்றுவார் என்ற தகவலையும் தெரிவித்தார். துவாரகாவின் வருகையை மத்திய மாநில அரசுகள் வரவேற்க வேண்டும். அவர் அரசியல் ரீதியாக இயங்கவிருப்பதாகத் தெரிகிறது” என்றார்.
from India News https://ift.tt/Bb0hVLJ
No comments