“இன்று சிறப்பானதாக அமையவில்லை; முடிந்தவரை முயற்சித்தோம்” - கேப்டன் ரோகித் சர்மா
அகமதாபாத்: நடப்பு கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி உள்ளது. இந்த சூழலில் போட்டி முடிந்த பிறகு கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தது.
“ஆட்டத்தின் முடிவு நமக்கு சாதகமாக இல்லை. இந்த நாள் சிறப்பானதாக அமையவில்லை. நாங்கள் முடிந்தவரை முயற்சித்தோம். கூடுதலாக 20 - 30 ரன்கள் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். கோலியும், ராகுலும் சிறப்பான கூட்டணி அமைத்தனர். நாங்கள் 270 முதல் 280 ரன்கள் வரை எதிர்பார்த்தோம். ஆனால், தொடர்ந்து விக்கெட் இழந்த காரணத்தால் அது முடியாமல் போனது. 240 ரன்களை டிஃபென்ட் செய்யும் போது சீரான இடைவெளியில் விக்கெட் வீழ்த்த வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/plqjOd8
No comments