Breaking News

டி20 தரவரிசையில் ரவி பிஷ்னோய் முதலிடம்

துபாய்: ஐசிசி-யின் சர்வதேச டி 20 கிரிக்கெட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கானை பின்னுக்குத்தள்ளி முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய்.

23 வயதான ரவி பிஷ்னோய் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முடிவடைந்த 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் 9 விக்கெட்கள் வீழ்த்தி சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தியிருந்தார். இதனால் ஐசிசி தரவரிசையில் 699 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 692 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/S0oGKsU

No comments