தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவு: பார்வையாளர்கள் முன்னிலையில் இன்று பரிசீலனை
தமிழகத்தில் 234 தொகுதிகளில் நேற்று மாலையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறை வடைந்த நிலையில், இரவு8.30 மணி நிலவரப் படி மனுக்களின் எண்ணிக்கை 6,100-ஐ தாண்டியது. நேற்று ஒரேநாளில் மட்டும் 1,500 பேருக்கும் மேல் மனுத்தாக்கல் செய்தனர்.
தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 12-ம் தேதி தொடங்கியது. போடியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடியில் முதல்வர் பழனிசாமி, கொளத்தூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், திருவொற்றியூர் தொகுதியில் சீமான், கோவில்பட்டியில் டிடிவி தினகரன், விருத்தாசலத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உட்பட பல கட்சிகளின் தலைவர்கள் மனுத்தாக்கல் செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3eX24a9
via
No comments