ஏப். 24-ம் தேதி வரை, ஆக.18 முதல் செப்.1 வரை- தமிழகத்தில் நிழல் இல்லா நாட்கள் ஏற்படும் நகரங்கள் அறிவிப்பு

தமிழகத்தில் ஏப்.10 முதல் 24-ம்தேதி வரையிலும், ஆக.18 முதல் செப்.1-ம் தேதி வரையிலும் நிழல் இல்லா நாள் ஏற்படும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட நாளில் நண்பகலில் சூரியன் நமது தலைக்கு மேல் இருக்கும். அப்போது நிழல் எந்தப் பக்கமும் சாயாமல் நேராக நமது காலடியில் இருக்கும். செங்குத்தாக நிற்கும் பொருட்களின் நிழல் அதன் அடியிலேயே விழுவதால் நம் கண்களுக்கு அவை தெரியாது. அந்த நாளை `நிழலில்லா நாள்' அதாவது பூஜ்ய நிழல் நாள் என்கிறோம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fZTlo3
via
No comments