Breaking News

சட்டப்பேரவை தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடை களுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடர் விடுமுறையையொட்டி நேற்று டாஸ்மாக் கடைகளில் மது அருந்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.

தமிழகம் முழுவதும் வரும் 6-ம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, வாக்குப்பதிவு நடை பெறுவதையொட்டி இன்று முதல் வரும் 6-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், வழக்கமான விற்பனையைவிட, 30 சதவீதத்துக்கு மேல் அதிகமாக விற்பனை நடைபெறும் கடைகளை ஆய்வு செய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2OpsExW
via

No comments