பின்னணி பாடகி மகளுக்கு பாலியல் வன்கொடுமை; உறவினர், கிறிஸ்தவ மதபோதகர் உட்பட 4 பேரை பிடிக்க தீவிரம்: அண்டை மாநிலங்களிலும் தேடுதல் வேட்டை

பிரபல பின்னணி பாடகியின் மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரின்பேரில் அவரது தங்கை குடும்பத்தினர் மற்றும் கிறிஸ்தவ மதபோதகர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.
ஹைதராபாத்தை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி ஒருவர் தற்போது தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக உள்ளார். இவர் சென்னை கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சமீபத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், ‘எனது 15 வயது மகளிடம் சென்னைசாலிகிராமத்தில் உள்ள எனது தங்கை குடும்பத்தினர், கீழ்ப்பாக்கம் பகுதியில் வசிக்கும் ஒரு கிறிஸ்தவ மதபோதகர் உள்ளிட்டோர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டு இருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3eaXEKF
via
No comments