Breaking News

வேளச்சேரி பேரவைத் தொகுதிக்குட்பட்ட 92-வது வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு

வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட 92-வது எண் வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப் பதிவு நடக்கிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 6-ம் தேதி நடந்தது. வாக்குப்பதிவு முடிந்த தும் மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் சீலிடப்பட்டு வாக்கு எண்ணும் மையங் களுக்கு அனுப்பப்பட்டன. சென்னை வேளச் சேரி தொகுதியில் உள்ள சீதாராம் நகர் டிஏவி பள்ளியில் 92-வது ஆண்கள் வாக்குச் சாவடியில் இருந்து 2 மின்னணு இயந்திரங் கள், ஒரு கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் ஒரு விவி பாட் இயந்திரத்தை விதிகளை மீறி இருசக்கர வாகனத்தில் ஊழியர்கள் எடுத்துச் சென்றனர். இதனால் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3x3XHRm
via

No comments