Breaking News

வீடு வீடாக வேட்பாளருடன் 5 பேருக்கு மேல் வாக்கு சேகரிப்பு: சுட்டிக்காட்டாத ஊடக கண்காணிப்புக் குழு; கண்டுகொள்ளாத தேர்தல் அதிகாரிகள்

வீடு வீடாக வாக்கு சேகரிக்க வேட்பாளருடன் சேர்த்து 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், விதிகளை மீறி பெரும்பாலான வேட்பாளர்கள் 5 பேருக்கு மேல் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். அதை ஊடக கண்காணிப்பு குழுக்களும், தேர்தல் அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஓராண்டாக இந்தியாவில் கரோனா தொற்று பரவி வருகிறது. கடந்த ஒரு மாதமாக தொற்று மேலும் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தலை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, வேட்புமனு தாக்கலின்போது, வேட்பாளருடன் சேர்த்து 3 பேர், வீடு வீடாக வாக்கு சேகரிக்கும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ucz9Dm
via

No comments