Breaking News

வாக்காளர்களுக்கு பாஜக குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம்; ஆதார் ஆணையம் விளக்கம் தர உத்தரவு: தனி மனித உரிமை மீறல் என உயர் நீதிமன்றம் கண்டனம்

புதுச்சேரியில் வாக்காளர்களின் செல்போன் எண்களை முறைகேடாக பெற்று, பாஜகவினர் குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார் எழுந்த விவகாரத்தில் ஆதார் ஆணையம், தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் வாக்காளர்களின் செல்போன் எண்கள் போன்ற தனிநபர் தகவல்களை ஆதார் ஆணையத்திடம் இருந்து முறைகேடாக பெற்று புதுச்சேரி பாஜக சார்பில் வாட்ஸ்அப் குழுக்கள் அமைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து சிறப்பு புலனாய்வு விசாரணை கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி தலைவர் ஆனந்த், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2R0nQjt
via

No comments