Breaking News

தேர்தல் நெருங்கும் நேரத்தில் வாக்காளர்களுக்கு செயலிகள் மூலம் பணம் கொடுப்பதை தடுக்க ஏற்பாடு : தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை

தனியார் செல்போன் செயலிகள் மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தல், 2019 மக்களவை தேர்தலில் பல நூறு கோடி ரூபாய் பணத்தை வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் கொடுத்ததாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் இருந்தாலும் வாக்குப்பதிவுக்கு சில மணி நேரத்துக்கு முன்புகூட பண விநியோகத்தை அரசியல் கட்சிகள் கச்சிதமாக முடித்து விடுகின்றன. கடந்த காலம்போல இல்லாமல் இம்முறை பண விநியோகத்துக்கு தொழில்நுட்ப வசதிகளும் கைகொடுக்கின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39Andnf
via

No comments