Breaking News

கடலூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த கரோனா தொற்றாளர் உடல் மாற்றி அனுப்பி வைப்பு

கடலூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த கரோனா தொற்றாளர் உடல் மாற்றி அனுப்பப்பட்டுள்ளது.

புவனகிரி அருகே உள்ள ஆதி வராகநத்தம் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் கடந்த சில தினங்களுக்கு முன் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் நேற்று உயிரிழந்தார். உயிரிழந்தது குறித்து கடலூர் அரசு மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டுக்கு தகவல் தரப்பட்டது. இதனை தொடர்ந்து அவரது உறவினர்கள் உடலைப் பெற்று, அவரது சொந்த ஊரான ஆதிவராகநத்தம் பகுதி கொண்டு சென்றனர். அவர்களின் மதவழக்கப்படி புதைத்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uSd3Gu
via

No comments